பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்னதாக போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் அஞ்சலி

By ஏஎன்ஐ

பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் ராஜ்நாத் சிங்.

இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் தேசத்தின் பாதுகாப்புக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவருடன் ராணுவத் தளபதி பிபின் ராவத், விமானப் படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பி.எஸ்.தனாவோ, கடற்படைத் தளபதி கரம்பீர் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக நேற்றே ராஜ்நாத் சிங் தனது இந்த அஞ்சலி நிகழ்ச்சி தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். நாளை தேசிய போர் நினைவடத்திற்குச் சென்று தேசப் பாதுகாப்புக்காக தங்கள் இன்னுயிர் ஈந்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளேன்.

பின்னர் முறைப்படி அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளேன். தேசத்தின் பாதுகாப்பை இன்னும் வலுப்படுத்த எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன் எனப் பதிவிட்டிருந்தார்.

அதன்படி இன்று காலை அவர் தேசிய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

மோடி அரசின் 2-வது இன்னிங்ஸில் ராஜ்நாத் சிங் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த முறை நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். அவர் இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார். இம்முறை அவருக்கு நிதியமைச்சகம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

40 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்