சென்னையில் தண்ணீரைவிட தங்கம் விலை மலிவு என்பதுதான் உண்மை நிலை: டி.கே.ரங்கராஜன்

By பிடிஐ

தமிழகம் முழுதும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும் சூழ்நிலையில் இன்று மாநிலங்களவையில் சிபிஎம் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்  ‘சென்னையில் தண்ணீரைவிட தங்கம் விலை மலிவு’என்று கூறினார்.

 

நாட்டின் நீர்பற்றாக்குறை குறித்த இன்றைய குறுகிய நேர விவாதத்தில் வறண்டு போன முதல் நகரமாகிறது சென்னை என்றும் ஜூன் 13, 2019 வரை மழையின் அளவுப் பற்றாக்குறை 41% என்று மத்திய நீராதார ஆணையம் தெரிவித்தது என்றும் சுட்டிகாட்டினார்.

 

“சென்னை மக்கள் இன்றைய நிலையில் பெரும்பாலும் தண்ணீர்லாரிகளையும், முனிசிபல் நீர் விநியோகம், குடிநீருக்கு தனியார் விநியோகம் ஆகியவற்றை நம்பியிருக்கின்றனர். தனியார் தண்ணீர் ஒரு டேங்கின் விலை ஒரு கிராம் தங்கத்தை விட அதிகம் இப்போது சென்னையில் தண்ணீரைக் காட்டிலும் தங்கத்தின் விலை மலிவாக உள்ளது, இதுதான் உண்மை” என்றார்.

 

மேலும் அவர் கூறும்போது தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் சில தண்ணீர் தட்டுப்பாட்டினால் தங்கள் ஊழியர்கள் சிலரை வீட்டிலிருந்து பணியாற்ற வைத்துள்ளது என்றும் பல உணவு விடுதிகள் மூடப்பட்டுள்ளன, அண்டை மாநிலங்களுக்கும் சென்னையைக் காப்பாற்றும் பொறுப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்