ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியன் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர். ராணுவத் தரப்பில் மேஜர், 2 வீரர்கள் உயிரிழந்தனர்.
தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியன் நகர் பகுதியில் உள்ளூ ரைச் சேர்ந்த ஒருவரும் வெளி நாட்டுக்காரர் ஒருவர் உள்பட 3 தீவிரவாதிகள் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த வீட்டை ராணுவத்தினரும் போலீஸாரும் வெள்ளிக்கிழமை மாலை சுற்றி வளைத்தனர்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர். ராணுவ தரப்பில் ஒரு வீரர் காயமடைந்தார். நள்ளிரவு வரை சண்டை நீடித்தது. பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் தீவிரவாதி கள் பதுங்கியிருந்த வீடு தரைமட்டமானது. சனிக்கிழமை காலையில் அந்த வீட்டின் இடிபாடுகளில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர்.
அப்போது அதற்குள் மறைந் திருந்த ஒரு தீவிரவாதி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதில் மேஜர் வரதராஜன் மற்றும் 2 வீரர்கள் பலியாயினர். அந்த தீவிர வாதியை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். “வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய என்கவுன்ட்டர் சனிக்கிழமை காலை 9.15 மணிக்கு முடிவுக்கு வந்தது. 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத் தரப்பில் 3 பேர் பலியாயினர்” என்று மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago