மிஸ் இந்தியா பட்டம் வென்ற ராஜஸ்தான் மாணவி

2019-ம் ஆண்டின் மிஸ் இந்தியாவாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சி.ஏ. மாணவி சுமன் ராவ் தேர்வு செய்யப்பட்டு முடி சூட்டப்பட்டார்.

மும்பையில் உள்ள சர்தார் வல்லபாய்படேல் உள்ளரங்கில் மிஸ் இந்தியா போட்டி நடந்தது. நடுவர்களாக பல்குனி ஷானே பீக்காக், 2018 மிஸ் இந்தியா வனேஸா போன்கா டி லியான், நடிகர்கள் ஹூமா குரோஷி, சித்ரங்கதா சிங், ஆயுஷ் சர்மா, நடன இயக்குநர் ரமோ டிசோஸா, தடகள வீராங்கனை தத்தே சந்த், சுனில் சேத்ரி, நடிகைகள் கேத்ரீனா கைப், விக்கி கவுசல், நோரா பதேஹி, மவுனி ராய் ஆகியோர் பங்கேற்றனர்.  

இந்த நிகழ்ச்சியை கரண் ஜோகர், நடிகர் மணிஷ் பால், 2017 மிஸ் வேர்ல்டு மனுஷி ஷில்லர் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

இந்த போட்டியில் மிஸ் இந்தியாவாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சி.ஏ பயிலும் மாணவரி சுமன் ராவ் மூடிசூட்டபட்டார். சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஷிவானி ஜாதவ் மிஸ் கிராண்ட் இந்தியாவாகவும், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஷ்ரேயா சங்கர் மிஸ் இந்தியா யுனைடெட் கன்டினென்ட்ஸ் ஆகவும் தேர்வு செய்யப்பட்டார்.

தெங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சனா விஜ் மிஸ் இந்தியா 2-வது இடம் பெற்றார்.

மிஸ் இந்தியா பட்டம் வென்ற சுமன் ராவ் கூறுகையில், " இந்த சமூகத்தில் உள்ள மற்ற பெண்களும் தங்கள் கனவுகளை நிறைவேற்ற அச்சப்படக்கூடாது. என்னுடையவெற்றி என் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் த்ரிலிங்காக இருக்கும். இன்னும் கொண்டாட்டத்துக்காக காத்திருக்க முடியாது" எனத் தெரிவித்தார்.

 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE