புனித தலமான ராமேஸ்வரத்துக்கு விமானப் போக்குவரத்து: முஸ்லிம் லீக் எம்பி கோரிக்கை

By ஆர்.ஷபிமுன்னா

இந்துக்களின் புனித தலமான ராமேஸ்வரம் வந்து செல்ல விமானப்போக்குவரத்து செய்யுமாறு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்பியான கே.நவாஸ்கனி கோரியுள்ளார். ராமநாதபுரம் எம்பியான அவர் இதை மக்களவையில் மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.

இது குறித்து மக்களவையின் பூஜ்ஜியநேரத்தில் நேற்று நவாஸ்கனி பேசியதாவது: நாட்டின் முக்கியமான புனிதத்தலமாக ராமேஸ்வரம் திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் தனுஷ் பகுதிக்கும் சென்று வருகின்றனர்.

 இத்தகையோர் ராமேஸ்வரத்திற்கு வந்துசெல்ல போதியஅளவுக்கு போக்குவரத்து வசதி கிடையாது. எனவே அவர்கள் மதுரை வந்து நான்கு மணி நேரம் சாலை வழியே பயணித்த பின்பே ராமேஸ்வரத்திற்கு வர வேண்டி இருக்கிறது.

ராமேஸ்வரத்தில் விமான நிலையத்தை அமைத்து, விமானப் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். உதான் திட்டத்தின் கீழ்  ராமேஸ்வரத்தையும் இணைத்திட வேண்டும். இதன் மூலமாக மதுரை ராமேஸ்வரம் தூத்துக்குடி இடையே விமான போக்குவரத்துக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும். இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து வரும் துரித ரயில்களின் நிறுத்தத்திற்கும் இங்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

பயணிகளின் நலன் கருதி மின்தூக்கிகளையும் மின் படிக்கட்டுகளையும் அமைக்க வேண்டும். இவை காலத்தின் கட்டாயத் தேவைகள் ஆகும். ராமேஸ்வரத்தை மேம்படுத்தும் திட்டங்களுக்கு போதிய நிதி உதவி செய்ய வேண்டும்.

இந்திய சுற்றுலா மேம்பாட்டு வாரியத்தின் அலுவலகம் ஒன்றையும் ராமேஸ்வரத்தில் அமைக்க வேண்டும். யாத்திரை மேற்கொள்வோருக்கு இந்த திட்டத்தால் மிகுந்த பயன் கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்