பீகாரில் மூளைக்காய்ச்சலுக்கு 57 குழந்தைகள் பலி எதிரொலி: பாதிப்பு எண்ணிக்கை குறைய சிறப்பான நடவடிக்கை: ஹர்ஷ் வர்தன் பேட்டி

By ஏஎன்ஐ

பீகாரில் மூளைக்காய்ச்சலுக்கு 57 குழந்தைகள் பலியாகியுள்ளதை அடுத்து மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

பீகாரில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமான குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் கடந்த சில நாட்களில் 57 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தற்போது 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. எனினும் அவர்களிலும் சில குழந்தைகள் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீகாரில் எடுக்கப்பட்டுவரும் துரித நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் ஏஎன்ஐக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்தாவது:

பீகாரில் ஏற்பட்ட இப்பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சாத்தியமான எல்லாவகையான உதவிகளையும் அளித்துவருகிறோம் என்பதற்கு நான் உறுதியளிக்கிறேன். இவ்வகையில் மூளைக்காய்ச்சலில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. விரைவில் இந்நிலை கட்டுக்குள் கொண்டுவரப்படும்.

பீகாரில் குழந்தைகள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளுக்கு டெல்லியிலிருந்து ஒரு நிபுணர்க்குழு விரைந்து  உரிய சிகிச்சைக்காக நேரில் ஆய்வு செய்தது. பின்னர் மாநில அரசுடன் ஆலோசனை நடத்தியது. இது தவிர பீகார் சுகாதார அமைச்சருடனான கூட்டத்தை நான் இருமுறை நடத்தினேன். நாங்கள் இச்சூழ்நிலையில் மேலும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தோம்.

பீகாருக்கு மத்திய அரசு மருத்துவரீதியாக அவர்களது மருத்துவ சேவைகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும். வரும் ஆண்டுகளிலும் இத்தகைய பிரச்சனைகள் நேராமல் பார்த்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் பேட்டியில் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்