முன்னாள் டெல்லி மெட்ரோ தலைவர் ஈ.ஸ்ரீதரன் இவர் ‘மெட்ரோ மேன்’ என்று புகழ் பெற்றவர், இவர் ஆம் ஆத்மி கட்சியின் மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவசம் என்ற திட்டத்தை ஏற்க வேண்டாம், அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லியில் ஆட்சிபுரியும் ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்களுக்குக் கட்டணம் கிடையாது, இலவசம் என்று அறிவித்தது. டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் டெல்லி அரசு மற்றும் மத்திய அரசுக்கு சம உரிமை உள்ள நிறுவனமாகும், தற்போது டிஎம்ஆர்சி முதன்மை ஆலோசகராக இருக்கும் ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரன், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ‘நேரடி தலையீடு’ செய்து இந்த இலவசத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
“மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஒரு கூட்டாளி மட்டும் தன்னிச்சையாக முடிவெடுத்து பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்து டெல்லி மெட்ரோவை திறனழிப்புக்கும் திவாலுக்கும் இட்டுச் செல்ல முடியாது” என்று எழுதியுள்ளார்.
டெல்லி மெட்ரோ இயங்க முக்கியக் காரணகர்த்தாவான ஸ்ரீதரன் 2011-ம் ஆண்டு அதன் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து விலகினார். அப்போது டெல்லி மெட்ரோ நிர்வாகத்தில் தலையிட வேண்டாம் என்று விலகியதாகக் கூறியவர், தற்போது ஆம் ஆத்மியின் இந்த இலவச அறிவிப்பினால் பிரதமருக்கு தலையீடு கோரி கடிதம் எழுதியுள்ளார்.
இவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், டெல்லி மெட்ரோ முதன் முதலில் தொடங்கிய போது யார்க்கும் பயணச் சலுகை கொடுக்கக் கூடாது என்ற உறுதியான முடிவை எடுத்தேன். ஏனெனில் அப்போதுதான் வருவாயைப் பெருக்கி மெட்ரோ கட்டணங்கள் உயராமல் சாதாரண மக்களுக்கும் செலவழிக்கக் கூடிய கட்டணமாக இருக்க வேண்டுமென்ற நோக்கம்தான். அதே வேளையில் லாபம் ஈட்டி கடனையும் அடைக்க வேண்டும் என்பதும் குறிக்கோள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தன் வாதத்திற்கு எளிய சுயதேற்றமாக டிசம்பர் 23, 2002-ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயியே டிக்கெட் கட்டணம் செலுத்தித்தான் பயணம் செய்தார் என்பதையும் ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.
“இப்போது பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்தால் இது நாட்டின் பிற மெட்ரோ சேவைகளும் பாதிக்கும் தவறான முன்னுதாரணமாகி விடும். வருவாய் இழப்பை ஈடுகட்டுவோம் என்ற டெல்லி அரசின் முடிவு தவறானதாகும். இன்றைய தேதியில் ஆண்டுக்கு ரூ.1000 கோடி இழப்பு ஏற்படும். இது நிச்சயம் அதிகரிக்கும் ஏனெனில் மெட்ரோ டிக்கெட் கட்டணங்கள் உயரும்.” என்று பிரதமருக்கு அவர் தன் கடிதத்தில் எச்சரிக்கை மணி ஒலித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
31 mins ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago