ஆந்திராவில் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள ஒய்எஸ்ஆர் சிலைகளை அகற்ற ஜெகன் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?- தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கேள்வி

By என்.மகேஷ் குமார்

ஆந்திராவில் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சிலைகளை அகற்ற அவரது மகனும், மாநில முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாறியதும் பழி வாங்கும் படலங் கள் தொடங்கியுள்ளதால், அரசி யல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

இதனிடையே, புதிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு ஜனரஞ்சகமான திட்டங்களை அறிவித்து அதனை அமல் படுத் தியும் வருகிறார். அதேசமயத் தில், அரசு திட்டங்களின் பெயர் களை மாற்றுவது, முந்தைய ஆட்சி யின் சில திட்டங்களை கண்டு கொள்ளாமல் விடுவது, அரசு அதிகாரிகளை கூண்டோடு இட மாற்றம் செய்வது போன்ற நடவடிக் கைகள் நடந்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, சட்ட விரோதமாக அரசு நிலங்களில் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்று மாறு ஜெகன்மோகன் உத்தரவிட் டுள்ளார். அதன்படி, கிருஷ்ணா படுகை மீது கட்டப்பட்டிருக்கும் ‘பிரஜா வேதிகா’ என்ற பெயரிலான மக்கள் தர்பார் கட்டிடத்தை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று விமானம் மூலம் ஹைதராபாத் வந்தார். அப்போது, அவரிடம் ‘பிரஜா வேதிகா’ கட்டிடம் இடிக்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப் பினர். இதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:

மக்களுக்காக மக்கள் பணத்தில் இந்த கட்டிடம் கட்டப்பட்டது. அது மக்களுக்கு சொந்தமானது. இதனை இடிப்பது தவறாகும். ஆந்திராவில் ஜெகனின் தந்தையும், முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் ஆயிரக்கணக்கான சிலைகள் அனுமதியின்றி அமைக் கப்பட்டிருக்கின்றன. அந்த சிலை களை அகற்ற அவர் என்ன நட வடிக்கை எடுக்கப் போகிறார் என பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் பாதுகாப்பு ரத்து

இதனிடையே, வெளிநாட்டு பய ணத்தை முடித்துக்கொண்டு ஹைதராபாத் வந்த சந்திரபாபு நாயுடுவை வரவேற்க அவரது குடும்பத்தினர் விமான நிலையம் வந்திருந்தனர். இதில், சந்திரபாபு நாயுடுவின் மகனும், முன்னாள் அமைச்சருமான லோகேஷுக்கு மட்டும் 2 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.ஆனால், அவருக்கு எப்போதும் 4 போலீஸார் பாதுகாப்பு வழங்கு வது வழக்கம். மேலும், சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஷ்வரி, மருமகள் பிராம்மனி ஆகியோருக்கு இருந்த பாதுகாப்பு முற்றிலுமாக அகற்றப்பட்டு விட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

மேலும்