ஒரு கோடி மதரஸா மாணவர்களுக்கு சலுகைகள்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முஸ்லிம்கள் பாராட்டு

By ஆர்.ஷபிமுன்னா

மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பிரதமர் மோடி, அப்பதவியில் மீண்டும் அமர்ந்துள்ளார். இதனால், வரும்நாட்களில் இந்தியாவின் முஸ்லிம்களுக்கு சிக்கல் உருவாகும் என்ற பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், வெற்றிக்கு பின் நாடாளுமன்ற மையமண்டபத்தில் ஆற்றிய உரையில் அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரதமர் மோடி. ‘அனைவருடன் அனைத்து திட்டங்கள் எனும் கோஷத்துடன் இனி அனைவரது நம்பிக்கையையும் பெறுவது என்பது எங்கள் மந்திரம்’ என அறிவித்தார்.

அவர் தொடர்ந்து தன் உரையில், ‘ஏழைகளை போல், சிறுபான்மையினருக்கும் நம் நாட்டில் கடந்தகால ஆட்சிகளால் ஏற்பட்ட பாதிப்பு நீக்கப்பட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதை நிரூபிக்கும் வகையில் அவரது அரசு இருதினங்களுக்கு முன் வெளியிட்ட ஏழு சலுகை அறிவிப்புகள் முஸ்லிம்களின் பாராட்டை பெறத் துவங்கி உள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் உறுப்பினரான கமால் பரூக்கி கூறும்போது, ‘வரவேற்கத்தக்க பிரதமரின் அறிவிப்பை முஸ்லிம்களும் ஏற்று முழுமையாகப் பயன்படுத்துவது அவசியம். இந்த திட்டங்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் அறிவிப்பை போல் அன்றி, முறையாக அமலாக்க வெளிப்படைத்தன்மை வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.

மத்திய அரசின் அறிவிப்பில், ‘ஒரு கோடி முஸ்லிம் மாணவர்களுக்கு உதவித்தொகை. இதன் 50 சதவிகிதம் மாணவிகளுக்காகவே இருக்கும். அனைத்து மதரஸாக்களிலும் கட்டாயக் கம்ப்யூட்டர் கல்வி. மதரஸா கல்வியை பாதியில் விட்டவர்களுக்கு தொடர வசதி. இவர்களின் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவச பயிற்சி. மதரஸா மாணவிகளுக்கு ஐஏஎஸ், வங்கி உள்ளிட்ட திறனாய்வுத் தேர்வு எழுதவும் இலவச பயிற்சி மற்றும் மதரஸாக்களுக்காக ஒரு தனி செயல்திட்டம் உருவாக்கப்படும்’ என்பவை இடம் பெற்றுள்ளன.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வீ கூறும்போது, ‘இந்த அறிவிப்பின் மூலம் மதவாதம் எனும் நோயை போக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. மதரஸா கல்வி மதத்திற்கானது மட்டும் என்பதை மாற்றி அதன் மாணவர்களையும் பொது சமூகத்துடன் இணைக்கும். இதன்மூலம், மதரஸா மாணவர்களும் புதிய இந்தியாவின் பங்குதாரர்களாக ஆவார்கள்’ எனக் குறிப்பிட்டார்.

பிரதமராவதற்கு, சுமார் எட்டு வருடங்களுக்கு முன் குஜராத்தின் ஒரு மேடையில் முஸ்லிம்களின் தொப்பியை தலையில் அணிய லாவகமாக மறுத்தவர் மோடி. தான் முதல்முறை பிரதமரான பின் ரம்ஜான் மாதத்தில் குடியரசு தலைவரால் நடத்தப்பட்ட இப்தார் விருந்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இதுபோன்ற செயல்களால் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என பிரதமர் மோடி பற்றி ஒரு கருத்து எழுந்தது. எனினும், கடந்த ஆட்சியில் முஸ்லிம்கள் இடையே பல நூறு ஆண்டுகளாக தவறாகப் பயன்படுத்தப்பட்டு வந்த முத்தலாக் முறையை ஒழிக்க அவர் அவசர சட்டம் அமலாக்கினார்.

இதையடுத்து, முஸ்லிம் பெண்களின் பாராட்டை பெறத் துவங்கினார் பிரதமர் மோடி. இதன் பலன் அவரது கட்சிக்கு உ.பி.யில் 2017 சட்டப்பேரவை தேர்தலிலும் முஸ்லிம் பெண்களின் வாக்குகளும் பாஜக ஆட்சி அமைய உதவியது. எனினும், ஹஜ் யாத்திரைக்கான மத்திய அரசு மானியம் ரத்து செய்ததால் ஒரு அதிருப்தி எழுந்தது. இப்போது அதன்மூலம் அரசு சேமித்த தொகையும் மதரஸா மாணவ, மாணவிகளுக்கான பலனாக அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பலன்கள் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்