நாடாளுமன்றத்தை சுற்றிவரும் தரகர்களிடம் இருந்து விலகி இருக்கு மாறு புதிய எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த எச்சரிக்கையை தமிழகம் உட்பட நாட்டின் பிற கட்சிகளின் புதிய எம்.பி.க்கள் ஏற்று நடப்பார் களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 25-ம் தேதி பாஜக எம்.பி.க்கள் மத்தியில் நாடாளுமன்ற அரங்கில் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், "புதிய எம்.பி.க்களுக்கு உதவுவதாக கூறி ஒரு கும்பல் (தரகர்கள்) அதிக அன்புகாட்டி உங்களை அணுகும். அடுத்த சில தினங்களில், நீங்கள் இயல்பாக அவர்கள் நட்பில் சிக்கு வீர்கள். பிறகு, ஓரிரு ஆண்டு களுக்கு பின்னர், அவர்கள் எவ்வளவு பெரிய கில்லாடிகள் என அறிவதற்குள் உங்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும். எனவே, தயவுசெய்து, இதுபோல் சேவை எனும் பெயரில் வருபவர்களை விலக்கி வையுங்கள்" என்றார்.
பிரதமர் மோடி கூறுவதை விட அதிகமாக டெல்லியின் தரகர்கள் கும்பல், புதிய எம்,பி,க்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக பணம் சம்பாதித்து வருகிறது
முதன்முறையாகத் தேர்வா கும் எம்.பி.க்களில் பெரும்பாலா னவர்களுக்கு நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்து ஒன்றுமே தெரியாத நிலை உள்ளது.
இந்தச் சூழலில், நாடாளுமன்ற அலுவலர்களில் ஒருவரால் இந்த தரகர்கள் புதிய எம்.பி.க்களை அணுகுகின்றனர். அவர்கள் தேவையை ஏதோ ஒரு வகையில் பூர்த்திசெய்து எம்.பி.க்களை தங்கள் வலையில் சிக்க வைக்கின்றனர். இதுபோல் சிக்கியவர்கள், தங்களை அறியாமலேயே சட்டவிரோத செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் நாடாளுமன்ற அலு வலர்கள் வட்டாரம் கூறும்போது, “ரூ.40,000 மாத சம்பளத் தில் வைக்க வேண்டிய உதவி யாளர்களை வைக்காமல் எப்படி அந்த தொகையை சேமிப்பது என்ற யோசனையை எம்.பி.க்கள் முதலில் பெறுகின்றனர்.
பிறகு தமது அரசு குடியிருப் பின் ஒரு பகுதியை அல்லது பணியாளர்கள் உறைவிடத்தை தனியாருக்கு வாடகைக்கு விடுவதையும் அறிகின்றனர். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் களில் பொதுமக்களுக்காக எழுப்ப வேண்டிய கேள்விகளை சில தனியார் பெருநிறுவனங்களுக்காக எழுப்பி பணம் சம்பாதிக்கும் வழியும் தரகர்கள் மூலம் கிடைக்கிறது” எனத் தெரிவித்தனர்.
கடந்த ஆட்சியில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த பெரும்பாலான எம்.பி.க்கள் தமக்கான உதவியாளர்களை அமர்த்தவில்லை. மாறாக, அதில் ரூ.5,000 முதல் 20,000 வரை மட்டும் அவர்களுக்கு அளித்திருப்பது தெரியவந்துள்ளது. இவ்வளவு குறைந்த ஊதியத்தை ஏற்கும் உதவியாளர்கள். ஒரே சமயத்தில் 5 எம்.பி.க்களுக்கு பணியாற்ற வேண்டிய கட்டாயத்தை சவாலாக ஏற்கின்றனர்.
இதுகுறித்து ’இந்து தமிழ்’ நாளேட்டிடம் எம்.பி.க்களின் உதவி யாளர்கள் வட்டாரம் கூறும்போது, “எங்கள் பணி நிரந்தரம் இல்லை என்பதால் எம்.பி.க்கள் மனம் கோணாமல் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம். இதற்காக, சிலர் எங்களுக்கு தங்கும் இடத்தை மட்டும் ஊதியமாக அளிப்பதும் உண்டு. இதனால், வேறுவழியின்றி எங்களில் சிலர், சட்டவிரோத செயல்களில் பணம் பார்க்கத் துவங்குகின்றனர். இதற்கு முடிவு கட்ட, எங்களுக்கு குறிப்பிட்ட தகுதி யுடன், ஊதியத்தை அரசே நிர்ண யிக்க வேண்டும்” எனத் தெரிவித்த னர். ஒரு உதவியாளரின் பல எம்பிக் களில் ஒருவராக இருப்பவர் அந்த ரூ.40,000 ஊதியத்தை தம் உறவினர்கள் பெயரில் பெற்றுக் கொள்கிறார். இந்தமுறை அவ்வாறு தமது உறவினர்களை உதவியாளர்களாக அமர்த்தக் கூடாது என பிரதமர் மோடியும் எச்சரித்திருந்தார்.
ஆனால், இதையும் மீறி பல எம்.பி.க்கள் தம் உறவினர்களை உதவியாளர்களாக அமர்த்தி அடையாள அட்டையும் பெற்றுள்ள னர். இவர்களில், சில எம்.பி.க் களின் உதவியாளர்கள் என பெயரளவிற்கு அமர்த்தி, வெறும் அடையாள அட்டை மட்டும் கொடுத்துவிட்டு அவர்களிடம் வாகனவசதி உள்ளிட்ட சில பலன்களை பெற்று விடுகின்றனர்.
சில தரகர்களின் கும்பல் மாதம் ரூ.20,000 மட்டும் அளித்துவிட்டு, கேள்வி எழுப்பும் விண்ணப்பங் களில் எம்,பி,க்களின் கையொப் பத்தை மட்டும் பெறுகின்றனர். இதை வைத்து இரு அவைகளில் தனக்கு வேண்டியக் கேள்விகளை எழுப்புகிறார்கள். இதற்காக, தனி யார் நிறுவனங்களிடம் பேரம் பேசிக் கொள்கின்றனர். வரும் 17 ஆம் தேதி நாடளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. அதற்கு முன்பாக, பிரதமர் மோடி, தரகர்களின் செயலை முதன்முறையாகக் குறிப்பிட்டு புதிய எம்.பி.க்களை எச்சரித்துள் ளார். எனவே, தரகர்களிடம் சிக்காமல் தமது உதவியாளர்கள் மீதான விவரங்களை எம்.பி.க்கள் தனிப்பட்ட அல்லது கட்சி மற்றும் நாடாளுமன்ற இணையதளப் பக்கங்களில் குறிப்பிடுவதும் நல்லது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago