ராஜஸ்தானில் நான்கு நாட்களில் ஹோலி பண்டிகை மோதல் எதிரொலியாக அடுத்தடுத்து தலித் சமூக சிறுவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள பிவாடி நகரில் வழக்கம்போல் இந்த ஆண்டும் ஹோலி பண்டிக்கை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அப்போது வண்ணப் பொடிகளை தூவுவது தொடர்பாக இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது குடிபோதையில் இருந்த ஒரு கும்பல் வண்ணப் பொடிகளை தூவிய நீரஜ் ஜாதவ் என்ற 16 வயது சிறுவரை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த நீரஜ் ஜாதவ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து நீரஜ் ஜாதவை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் நீரஜ் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பிவாடி நகரில் பூல்பாக் பகுதியில் அஜய் ஜாதவ் (வயது 17) என்பவரின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
ஹோலி பண்டிகையின் போது எழுந்த மோதலை தொடர்ந்து குறிப்பிட்ட பிரிவினர் அஜய் ஜாதவை கொன்று உடலை எரித்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நான்கு நாட்களுக்கும் இரண்டு தலித் சமூக சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நகரம் முழுவதும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago