28-2-1919-ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ரவீந்திரநாத் தாகூரின் தேசிய கீதத்துக்கு 100 வயது: ஆந்திராவில் முதன்முறையாக பாடப்பட்டது

By என்.மகேஷ் குமார்

ரவீந்திரநாத் தாகூரால் இயற்றப்பட்ட தேசிய கீதத்துக்கு 100 வயதாகிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்தப் பாடல் ஆந்திராவில் உள்ள ஒரு கல்லூரியில் முதன்முறையாக பாடப்பட்டது.

‘விஸ்வ கவி’ என போற்றப்படும் ரவீந்திரநாத் தாகூர் ஜனகன மன பாடலை முதலில் வங்க மொழியில் இயற்றினார். இது நம் நாட்டின் கலாச்சாரம், பெருமைகளை எடுத்துக்கூறும் வகையில் இருந்ததால் இதை இந்திய அரசு 1950-ம் ஆண்டில் தேசிய கீதமாக அங்கீகரித்தது. இதற்கு பின்னால் ஒரு சுவாரஸியமான கதை உள்ளது.

சித்தூர் மாவட்டம், மதனபள்ளியில் டாக்டர். அன்னி பெசன்ட் அம்மையார் பி.டி. கல்லூரியை நிறுவி நடத்தி வந்தார். அப்போது இந்திய சுதந்திர போராட்டம் உச்சத்தில் இருந்தது. 1919-ல் பெங்களூரு வந்திருந்த ரவீந்திரநாத் தாகூரை, தனது பி.டி கல்லூரிக்கு வருமாறு அன்னி பெசன்ட் அம்மையார் அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட தாகூர், கடந்த 25-2-1919 முதல் 2-3-1919 வரை பி.டி. கல்லூரியிலேயே தங்கி இருந்தார். அப்போது, தான் வங்க மொழியில் எழுதியிருந்த ‘ஜனகன மன’ பாடலை 28-2-1919-ம் தேதி, ‘தி மார்னிங் சாங் ஆஃப் இந்தியா’ என்ற தலைப்பில் தன் கைப்பட ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இதை அன்னி பெசன்ட் அம்மையாருக்கும் காண்பித்தார். இது தேசிய ஒருமைப்பாட்டை விளக்குவதாக இருப்பதாகக் கூறி மகிழ்ச்சி அடைந்தார் அம்மையார்.

‘ஜனகன மன’ பாடலை கல்லூரியின் முதல்வராக இருந்த ஜேம்ஸ் எச்.கசின்ஸும் மிகவும் பாராட்டினார். பின்னர் இதே கல்லூரியில் சங்கீத ஆசிரியராக பணியாற்றிய ஜேம்ஸ் எச். கசின்ஸின் மனைவி மார்கரெட் கசின்ஸ் இதற்கு மெட்டு அமைத்தார். அதன்பிறகு மாணவர்களுடன் சேர்ந்து தாகூரும் இந்தப் பாடலை முதன் முதலில் பாடினர்.

அதன்பிறகு இந்தப் பாடல் 1950-ல் நம்முடைய தேசிய கீதமாக அங்கீகாரம் பெற்றது. ஆனால் 1919-ம் ஆண்டு முதல் இன்றுவரை பி.டி. கல்லூரியில் இப்பாடலை தினமும் மாணவர்களும் ஆசிரியர்களும் பாடி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. இப்பாடலுக்கு 100 ஆண்டுகள் ஆனதையொட்டி, கடந்த 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை பி.டி. கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ரவீந்திர நாத் தாகூர் தங்கியிருந்த அந்த அறை இப்போது பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தேசிய கீதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த இடத்தில் 90 கிலோ எடையில் தாகூரின் பளிங்கு உருவச் சிலையும் திறக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்