டீ விற்று மாதம் ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் ஆச்சரிய மனிதர்

By ஏஎன்ஐ

 

மஹாராஷ்டி மாநிலம் புனே நகரில், டீக்கடை நடத்தும் ஒருவர் மாதத்துக்கு ரூ.12 லட்சம் சம்பாதித்து வருகிறார்.

புனே நகரைச் சேர்ந்தவர் நவ்நாத் யவ்லி. இவர் டீக்கடை தொடங்க எண்ணி, எந்த இடத்தில் கடை தொடங்கலாம்?, எத்தனை பேர் டீ குடிப்பார்கள்? என்பது குறித்து 4 ஆண்டுகள் ஆய்வு செய்து சமீபத்தில் டீ கடை தொடங்கினார்.

முதலில் புனே நகரில் 'யவ்லி டீ ஹவுஸ்' என்ற பெயரில் நவ்நாத் யவ்லி டீக்கடை தொடங்கி, அடுத்தடுத்து, 3 இடங்களில் கடையின் கிளைகளை விரிவுபடுத்தினார். இப்போது, இவரின் ஒவ்வொரு கடையிலும் 12 பேர் வேலை செய்கிறார்கள்.  நாள்தோறும் 4 ஆயிரம் பேர் டீ குடிக்கிறார்கள்.

இது குறித்து நவ்நாத் யவ்லே கூறுகையில், ''தேநீர் கடை தொடங்க வேண்டும் என்று நான் சிந்தித்தபின், பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தேன். தொடர்ந்து 4 ஆண்டுகள் தேநீர் கடை குறித்தும், எத்தனை பேர் தேநீர் குடிக்க வருவார்கள், எங்கு தொடங்கலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்தேன்.

முடிவில் புனே நகரில் முதல் கடையும் அதன்பின் மற்ற இரு இடங்களில் யவ்லே டீ ஹவுஸை தொடங்கினேன். இப்போது மாதத்துக்கு ரூ.12 லட்சம் வருமானம் கிடைக்கிறது. நாள்தோறும் ஒரு கடையில் 4 ஆயிரம் பேர் டீ குடிக்கிறார்கள். இந்தக் கடையை சர்வதேச அளவில் அடுத்து விளம்பரம் செய்ய முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளேன்.

பிரதமர் மோடியின் பகோடா வியாபாரம் போல் வேலையில்லாத இளைஞர்கள் செய்யும் தொழில் அல்ல. இந்த தேநீர் விற்பனை கடை மூலம் இளைஞர்களுக்கு நான் வேலை கொடுத்து வருகிறேன். என் கடை மிக வேகமாக வளர்ந்து முன்னேறி வருகிறது. நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என நவ்நாத் யவ்லே தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்