பணம் அளித்து செய்தி வெளியிடப்பட்டால் சம்பந்தப்பட்ட வேட்பாளரை நீக்க வகை செய்யும் சட்ட விதிகளை வரையறுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தலைமைத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் டெல்லியில் நேற்று கூறியதாவது: பணம் அளித்து செய்தி வெளியிடப் படும் சம்பவங்களில் கடும் நடவடிக்கை எடுக்க முடிய வில்லை. தற்போதைய நடை முறைகளின்படி இது தேர்தல் விதிமீறலாக அறிவிக்கப்படா ததால் வேட்பாளர்கள் எளிதாக தப்பிவிடுகின்றனர். எனவே செய்திக்கு பணம் அளிப்பதை தேர்தல் விதிமீறலாக அறிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வேட்பாளரை போட்டியில் இருந்து நீக்கும் வகையில் கடுமையான சட்ட விதிகள் வரையறுக் கப்பட வேண்டும். வேட்பாளர்கள் மட்டுமன்றி அரசியல் கட்சிகள் சார்பிலும் பணம் கொடுத்து செய்திகள் வெளியிடப்படுகின்றன.
இதேபோல் தேர்தல் நேரத்தில் அரசு சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்தவும் சட்டவிதிகளை வகுக்க வேண்டும்.
இவைதொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
வேட்பு மனு தாக்கலுக்கு பிறகே வேட்பாளரின் செலவுகளை தேர்தல் ஆணையம் கண்காணிக்க முடிகிறது. ஆனால் அதற்கு முன்னதாகவே வேட்பாளர்கள் பணத்தை வாரியிறைக்கின்றனர். அந்த செலவையும் கணக்கில் கொண்டுவர வேண்டும்.
மேலும் இப்போதைய நடைமுறைகளின்படி தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக வேட்பாளர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். அரசியல் கட்சிகளின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதுதொடர்பாகவும் ஆணை யத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று வி.எஸ். சம்பத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
35 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago