தெலங்கானாவில் ஷேர் ஆட்டோ கிணற்றில் விழுந்து 10 பேர் பலி

By என்.மகேஷ் குமார்

தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில் நேற்று மாலை அதிவேகமாக வந்த ஷேர் ஆட்டோ சாலையோர தரை கிணற்றில் நிலை தடுமாறி விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் முப்கால் பகுதியில் இருந்து மெண்டோரா பகுதிக்கு 19 பேர் நேற்று மதியம் ஷேர் ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்தனர். அதிவேகமா கச் சென்ற ஆட்டோ, மெண்டோரா அருகே ஒரு வளைவில் திரும்பியபோது, சாலை ஓரத்தில் இருந்த தரைக்கிணற்றுக்குள் நிலை தடுமாறி விழுந்தது.

இதை பார்த்த கிராம மக்கள் நிஜாமாபாத் போலீஸாருக்கு தக வல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீஸார், தீயணைப்பு படையினர் மற்றும் நீச்சல் வீரர்கள் என பலர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கிரேன் இயந்திரம் மூலம் ஆட்டோ மேலே தூக்கப்பட்டது.

இந்த விபத்தில் 5 பெண்கள், 5 சிறுவர்கள் என 10 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 9 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் நிஜாமாபாத் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிலரின் நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நிஜாபாத் போலீ ஸார் வழக்கு பதிவு செய்து முதற்கட்ட விசாரணை நடத்தியதில், ஆட்டோவில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியதும், அதிவேகமாக சாலை வளைவில் திரும்பியதுமே விபத்துக்கு கார ணம் என்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

ஷேர் ஆட்டோவில் ஒரு பயணிக்கு 10 ரூபாய் கட்டணம். முப் கால் பகுதியிலிருந்து ஆட்டோ புறப்படும்போதே 8 பயணிகள் இருந்துள்ளனர். அவர்களே உட் கார இயலாத நிலையில், சிறிது தூரம்தானே எனக்கூறி குழந்தைகளை மடியில் உட்கார வைத்து வழி நெடுகிலும் மேலும் 10 பேரை ஆட்டோ ஓட்டுநர் ஏற்றியுள்ளதாக தெரிகிறது.

10 ரூபாய் ஆசையால் விபரீதம்

10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு அளவுக்கு அதிகமாக பயணிகலை ஏற்றியதே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, சாலையோர கிணற்றில் ஆட்டோ விழுந்தது என்று உயிர் தப்பிய பயணிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு பேருந்து விபத்து

சேலத்தில் இருந்து திருப்பதிக்கு நேற்று சென்று கொண்டிருந்த தமிழக அரசு பேருந்து, திருப்பதி-சித்தூர் நெடுஞ்சாலை யில் பேரூர் அடுத்துள்ள பாத்த கால்வா கிராமம் அருகே வந்த போது நிலை தடுமாறி சாலை யோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநரும் ஒரு பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

போலீஸார் விரைந்து வந்து காயமடைந்த 5 பேரை மீட்டு திருப்பதி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மற்ற பயணிகளை மாற்று பேருந்து மூலம் திருப்பதிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சந்திரகிரி போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்