ஐன்ஸ்டீன் சொன்னதை விட வேதத்தில் சிறந்த கோட்பாடு உள்ளது: ஹாக்கிங் கூறியதாக மத்திய அமைச்சர்; ஆதாரம் கேட்டதற்கு மழுப்பல்

By ஜேக்கப் கோஷி

மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இந்திய அறிவியல் மாநாட்டில் பேசும்போது, ‘இந்திய வேதத்தில் உள்ள கோட்பாடு ஐன்ஸ்டீனின் சிறப்புச் சார்புக்கொள்கையைக் காட்டிலும் சிறந்தது என்று மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங் கூறினார்’ என்று கூறினார்.

இம்பால் நகரில் மணிப்பூர் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்த 105-வது இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு ஹர்ஷ வர்தன் இத்தகைய கருத்தைப் பேசிய போது சற்று முன் பேசிவிட்டு அமர்ந்த பிரதமர் மோடியும் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதாவது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் இன்று வரை ஆகச்சிறந்த கண்டுபிடிப்பாக கருதப்படும் E=mc2 என்ற கோட்பாடை விட வேதத்தில் உள்ள கோட்பாடு மேலும் சிறந்தது என்றார்.

“சமீபத்தில் நாம் ஒரு சிறந்த விஞ்ஞானி, அண்டவெளி ஆய்வாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கை இழந்துவிட்டோம். அவர் ஐன்ஸ்டீனின் E = mc2 கோட்பாட்டை விட வேதத்தில் உள்ள கோட்பாடு மேலும் சிறந்தது என்று ஆதாரத்துடன் பதிவுசெய்துள்ளார்” என்று பேசினார்.

நிறையும் ஆற்றலும் தனித்தனியானது என்று முந்தைய விஞ்ஞானக் கோட்பாடுகள் கூற அதனை மாற்றி ஐன்ஸ்டீன் இரண்டுமே ஒரே பவுதிகப்பொருள்தான் ஒன்று மற்றொன்றாக மாறும் என்றார். இந்த சிறப்புச் சார்புத்துவக் கொள்கையை அவர் 1905-ம் ஆண்டு நிறுவினார்.

மருத்துவரான டாக்டர் வர்தன் எந்த வேதக்கோட்பாட்டில் இதை விடச் ‘சிறந்த’ கோட்பாடு உள்ளது என்ற ஆதாரத்தைக் கொடுக்கவில்லை. ஹாக்கிங் எங்கு கூறியிருக்கிறார், ஆதாரம் என்ன என்று மத்திய அமைச்சரிடம் கேட்ட போது, “மீடியாவில் இருக்கும் நீங்கள் கொஞ்சம் உழைத்துக் கண்டுபிடியுங்கள், உங்களால் முடியாது எனும்போது நான் ஆதாரத்தைத் தருகிறேன்” என்று மழுப்பியுள்ளார்.

ஹாக்கிங் அப்படிக் கூறியதற்கு ஆதாரம் இல்லை:

ஹாக்கிங் வேதக்கோட்பாடு ஐன்ஸ்டீனின் கோட்பாடை விடச் சிறந்தது என்று கூறியதற்கான ஆவணபூர்வ ஆதாரங்கள் இல்லை. ஸ்டீபன் ஹாக்கிங் ஜோதிடத்தை மறுத்தது பிரசித்தம்.

அறிவியல் மாநாட்டில் இப்படி ஏதாவது ஒன்றை அடித்து விடுவது என்பது புதிதல்ல. 2015 அறிவியல் மாநாட்டில் வேதத்தில் உயர் தொழில்நுட்ப விமானங்கள் பற்றி இருக்கிறது என்று அடித்து விடப்பட்டதும் நடந்துள்ளது.

மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தனின் இந்தப் பேச்சு குறித்து டாடா அறிவியல் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர் மயங்க் வாஹியா தி இந்து (ஆங்கிலம்) தொடர்பு கொண்டு பேசிய போது, “டாக்டர் வர்தன் கூற்று பொருளற்றது. ஹாக்கிங் அத்தகைய தொடர்பை கூறியிருக்க வாய்ப்பில்லை. மின் காந்த கதிர்வீச்சு விதிகளை பருப்பொருள் இயக்கம் பற்றிய விதிகளுடன் ஒன்றிணைக்கவே ஐன்ஸ்டீன் நிறை-ஆற்றல் சமன்பாட்டை நிறுவினார். ஆற்றல் என்பது படைப்புக்கு வித்திடலாம் என்று தத்துவார்த்தப் பார்வைகள் இருக்கலாம். ஆனால் அது அறிவியல் கோட்பாடாகாது. அதுவும் நிச்சயம் ஐன்ஸ்டீன் கோட்பாடை விட மேலும் சிறந்தது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றார்.

சரி ஸ்டீபன் ஹாக்கிங்+வேதாஸ் என்று தேடல் எந்திரத்தில் போட்டுப் பார்த்தால், அதில் முதல் லிங்க் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயிண்டிபிக் ரிசர்ச் ஆன் வேதாஸ் என்ற இணையப்பக்கம் முதலில் வருகிறது. அதில் இந்த அமைப்பின் செயலர் சிவராம் பாபு என்பவரின் பதிவு உள்ளது, அதில் அவர் முன்னுரிமை கோரியதாவது, ‘டாக்டர் சிவராம் பாபு எழுதிய வேதஅறிவியல் புத்தகங்களை சுட்டிக்காட்டி ஸ்டீபன் ஹாக்கிங் ஐன்ஸ்டீன் கோட்பாட்டை விட சிறந்த கோட்பாடு வேதத்தில் உள்ளது என்று கூறினார்” என உள்ளது.

இது குறித்து ஐ-சர்வ் கோருவது என்னவெனில் இது அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சித் துறை (DSIR) என்ற அரசுத்துறையினால் அங்கீகரிக்கப்பட்டது என்று கூறுகிறது.

ஆனால் இந்த அமைப்பு மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன் கீழ் செயல்பட்டு வருவது தெரிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்