ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வேற்று மத பிரச்சாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஸ்ரீராம நவமி முதல் ஓராண்டாக அமலில் உள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து 35 கி.மீ தொலைவில் கேசலிங்காயபள்ளி என்ற குக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 1,500 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் இந்துக்களே. இங்கு கிறிஸ்தவர்களோ இஸ்லாமியர்களோ இல்லை. இந்நிலையில், ஊர் பெரியவர்கள் அனைவரும் ஒன்று கூடி, கிராம எல்லையில் ஓர் அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர்.
அதில் கேசலிங்காயபள்ளி கிராமத்தில் வேற்று மத பிரச்சாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு, ஸ்ரீராம நவமி முதல் அமலில் இருந்து வருகிறது.
இவர்கள் வைத்துள்ள அறிவிப்பு பலகையில், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்றும், ராமரின் பெருமைகளையும் எழுதி வைத்துள்ளனர். இந்த கிராமத்தில் உள்ளவர்கள் யாராவது வேற்று மதத்துக்கு மாறினால், அவர்களது தாயாரை வேறு மதத்துக்கு மாற்றியது போலாகும் என கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதலால் யாரும் மதம் மாறவோ, வேற்று மதத்தினர் இந்த கிராமத்தில் நுழையவோ அஞ்சுகின்றனர்.
இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி ரமணா கூறும்போது, “இங்கு மதம் சார்ந்த பிரச்சினைகள் எதுவும் இல்லை. ஆனால் ஓராண்டுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட மதத்தினர் வந்து, தங்களது மதத்தில் இணையுமாறு இந்துக்களை வற்புறுத்தினர். இது எங்களுக்கு பிடிக்கவில்லை. இதைத் தடுக்கவே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது” என்றார்.
மீறினால் தண்டனை
கிராம கட்டுப்பாடுகளை மீறி வேற்று மதம் மாறுபவர்களை துடைப்பத்தை கையில் ஏந்தியபடி கிராமம் முழுவதையும் சுற்றிவரச் சொல்லி தண்டனை தருகின்றனர். பின்னர் அவர்களை வேறு கிராமத்துக்கு அனுப்பியும் விடுகின்றனர். மேலும் மதம் மாறியவர்களுடன், இந்து மதத்துக்கு உள்ள பெருமைகள் குறித்து விவாதம் நடத்தி புரிய வைக்க முயற்சி செய்கின்றனர். அதேநேரம் இதுகுறித்து எந்தப் புகாரும் இதுவரை வரவில்லை என மைதுகூரு தாசில்தார் ஏ.நாகேஸ்வர ராவ், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வர் ஆகியோர் கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago