மகாராஷ்டிராவில் நடைபெற வுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய லோக் ஜனசக்தி கட்சி (எல்.ஜே.பி.) முடிவு செய்துள்ளது.
மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் 15-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு தொகுதி பங்கீடு தொடர்பாக உடன்பாடு ஏற்படாததால், பாஜக சிவசேனா கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி முறிந்து விட்டது. இந்நிலையில், பாஜக வுக்கு ஆதரவாக லோக் ஜனசக்தி பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளது. லோக் ஜன சக்தியின் தலைவரும், மத்திய உணவு, பொதுவிநியோகத் துறை அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ராம் விலாஸின் மகன் சிராக் பாஸ்வான் தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சியின் மத்திய ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஹரியாணா மாநிலத்திலும் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவது என லோக் ஜனசக்தி கட்சி முடிவு செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago