மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை செயலி விரைவில் அறிமுகம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

By என்.மகேஷ் குமார்

புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் குறித்து மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் புதிய செல்போன் செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இஸ்ரோ தலைவர் கே. சிவன், தனது குடும்பத்தாருடன் திருமலை ஏழுமலையான் கோயிலில் நேற்று தரிசனம் செய்தார். அதன் பின்னர், கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

இஸ்ரோ சார்பில் ஜி சாட் 11 செயற்கைக்கோள் வருகிற 29-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் குறித்த தகவல்களை மீனவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில், புதிய செல்போன் செயலியை இஸ்ரோ தயாரித்துள்ளது. இதன் மூலம், இயற்கை பேரிடர் குறித்து சுமார் ஒரு மணிநேரத்துக்கு முன்பாகவே மீனவர்கள் அறிந்து கொள்ளலாம். இந்த செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதேபோல், தகவல் தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி, ஒரே சமயத்தில் பல பள்ளிகளில் கல்வி கற்கும் முறையையும் வருகிற கல்வி ஆண்டில் இஸ்ரோ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்