டெல்லியில் அரசு அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு முடிவு எடுக்க கூடுதல் அவகாசம்

By எம்.சண்முகம்

டெல்லியில் புதிய அரசு அமைப்பது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்க நான்கு வாரம் கூடுதல் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் சட்டமன்றத்தை கலைத்துவிட்டு, மறுதேர்தலுக்கு உத்தரவிடாத துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் முடிவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கு, எச்.எல்.தத்து, சலமேஸ்வர், ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால், அருண் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மா, டெல்லியில் ஆட்சியமைக்க பாரதிய ஜனதா கட்சிக்கு அழைப்பு விடுக்கலாமா என்பது குறித்து ஆலோசனை வழங்கும்படி குடியரசுத் தலைவருக்கு துணை நிலை ஆளுநர் கடந்த 4-ம் தேதி எழுதிய கடித நகலை சமர்ப்பித்தார்.

தொடர்ந்து அவர் வாதிடு கையில், “ஒரு மாநிலத்தில் ஆட்சி அமைப்பது சட்டமன்றம் சார்ந்த பிரச்சினை. இதில், சட்டம் மீறப்பட்டால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். ஆட்சி அமைப்பது குறித்து முடிவெடுக்க அக்டோபர் இறுதி வரை அவகாசம் அளிக்க வேண்டும்” என்றார்.

இதற்கு நீதிபதிகள், “டெல்லியில் ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் நீதிமன்ற விசாரணையின் நோக்கம். மத்திய அரசு கேட்கும் கால அவகாசம் மிகவும் அதிகம். கூடுதல் அவகாசம் அளித்தால் அது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்” என்றனர்.

இதையடுத்து டெல்லியில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் மத்திய அரசு முடிவெடித்து நீதி மன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்