மக்களவையை காலவரையின்றி ஒத்திவைத்தால், உடனடியாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்பிக்களும் ராஜினாமா செய்ய வேண்டுமென அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி யின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தற்போது குண்டூர் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கட்சி எம்பிக்கள் அனைவரும் நேற்று குண்டூருக்கு சென்று, ஜெகன்மோகன் ரெட்டியுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், கட்சி யின் மூத்த நிர்வாகியும், எம்பியுமான ராஜ்மோகன் ரெட்டி கூறியதாவது:
மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். ஆனால், அமளி யால் மக்களவையை ஒத்திவைப்பதாகவும் தீர்மானத்தை ஏற்க முடியவில்லை என்றும் அவைத் தலைவர் தினமும் கூறுகிறார். தீர்மானத்தைக் கொண்டு வராமலேயே அவையை நாள் குறிப்பிடாமல் தள்ளி வைத்தால், எங்கள் கட்சியைச் சேர்ந்த 5 எம்பிக்களும் அன்றைய தினமே எம்பி பதவியை ராஜினாமா செய்வோம். இது ஜெகன் மோகன் ரெட்டியின் உத்தரவாகும்.
அதேபோல, தெலுங்கு தேசம் எம்பிக்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தால், பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து ஏன் கோருகிறோம் என்று நாட்டு மக்களும் பிரச்சினையை அறிவார்கள். அதன் பின்னர், மக்களிடையே சென்று , ஆந்திராவிற்கு மத்திய அரசு இழைத்த அநியாத்தை பிரச்சாரம் செய்வோம்.
இவ்வாறு எம்பி ராஜ்மோகன் ரெட்டி கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
இந்தியா
40 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago