திருப்பதியில் இருந்து கடந்த புதன்கிழமை இரவு 9.55 மணிக்கு இண்டிகோ தனியார் விமானம் 77 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றது. அதில், நடிகையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ரோஜாவும் பயணம் செய்தார். இந்நிலையில், இரவு 10.30 மணிக்கு ஹைதராபாத் சம்ஷாபாத் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியது.
அப்போது, ஓடுபாதையில் இறங்கிய சில நொடிகளிலேயே விமானத்தின் சக்கரம் திடீரென வெடித்தது. இந்த உராய்வின் காரணமாக, தீப்பற்றி அந்தச் சக்கரம் முழுவதிலும் பரவியது. இதை அறிந்த தீயணைப்புப் படையினர், உடனடியாக அங்கு சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
எனினும், விமானத்தின் கதவுகள் திறக்கப்படாததால், பயணிகள் அனைவரும் அச்சத்தில் இருந்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பயணிகளின் உறவினர்கள், விமான நிலையத்துக்கு திரளாக வந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சுமார் 2 மணி நேரத்துக்குப் பின்னர், கதவு திறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago