திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பூந்தி தயாரிக்கும் கிடங்கில் தீ

By என்.மகேஷ் குமார்

திருப்பதி ஏழுமலையானின் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றதாகும். ஏழுமலையான் கோயிலுக்கு பின்புறம் உள்ள ஒரு கிடங்கில் முதலில் பூந்தி தயாரிக்கப்படுகிறது. அதன் பின்னர், நவீன இயந்திரங்கள் மூலம் அவை ஏழுமலையானின் ‘போட்டு’ எனப்படும் பிரசாதம் தயாரிக்கும் இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் லட்டு பிரசாதம் உருவாக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மதியம் பூந்தி தயாரிக்கும் கிடங்கில் திடீரென தீப்பற்றியது. பூந்தி தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் கறைகள் அந்தக் கிடங்கின் மேற்கூரையில் அதிகமாக படிந்திருந்ததால், வெப்பத்தின் மூலம் திடீரென தீப்பற்றியது. இதனால் பக்தர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து தேவஸ்தான அதிகாரிகள், தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இது குறித்து தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு கூறுகையில், ‘‘ஒவ்வொரு பவுர்ணமி, அமாவாசையன்றும் பூந்தி கிடங்கில் மேற்கூரை உட்பட அனைத்து இடங்களிலும் சுத்தப்படுத்தி வருகிறோம். ஆயினும், நெய் படிவங்கள் அதிகமாக காணப்பட்டதால், தீ விரைவில் பரவியது. இருப்பினும் ஊழியர்களுக்கு எந்தவித சிறு ஆபத்தும் ஏற்படவில்லை’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்