உத்தரப்பிரதேச மாநிலத்தில், பள்ளிப் பேருந்தின் நடத்துனரின் கால் விபத்தில் துண்டிக்கப்பட்ட நிலையில், அதை எடுத்து அவருக்கே தலையனையாக்கிய கொடுமை மருத்துவமனையில் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது
உத்தரப்பிரதேசம், ஹான்சி மாவட்டத்தில், மவுரியான்பூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த பள்ளிப்பேருந்து, மாணவர்களை வீட்டில் இறக்கிவிட்டு பாமுரி கிராமத்துக்கு நேற்று வந்து கொண்டு இருந்தது.
அப்போது, சாலையின் குறுக்கே திடீரென ஆடுகள் சென்றதால், அதன் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ் திருப்பி இருக்கிறார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்டிரைவரும், மாணவர்கள் சிலரும், காயத்துடன் உயிர்தப்பினார். ஆனால், நடத்துனர் ஞான்ஷியாம்(வயது28) பேருந்தின் அடியில் சிக்கியதால், அவரின் கால் துண்டிக்கப்பட்டது..
இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, ஹான்சி மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் , மாணவர்கள்அனுமதிக்கப்பட்டனர். இதில் நடத்துனர் ஞான்ஷியாமை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஆனால், அவரை படுக்க வைத்த மருத்துவமனையின் செவிலியர்கள், தலையணை இல்லாததால், ஞான்ஷியாமின் துண்டிக்கப்பட்ட காலை அவருக்கே தலையணையாக வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.
இந்த சம்பவத்தைப் பார்த்த ஞான்ஷியாமின் உறவினர்கள் மருத்துவர்களிடமும், ஊழியர்களிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இதை ஊடகத்தினர் வீடியோ எடுத்து ஒளிபரப்பியதால் வைரலாகி பெரும் பரபரப்புக்கு உள்ளானது.
இந்நிலையில்,. இது குறித்து முழுமையாக விசாரணை நடத்த உத்தரப்பிரதேச மருத்துவக் கல்வி அமைச்சர் அசுடோஷ் டான்டன் உத்தரவிட்டுள்ளார். மேலும்,மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அவசரப்பிரிவு மருத்துவர் மகேந்திர பால் சிங், அலோக் அகர்வால், செவிலியர்கள் தீபா நராங், ஷாசி ஆகியோர் சஸ்பெண்ட் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்கள் மீது துறைரீதியாக விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ கல்லூரிகளின் இயக்குநர் கே.கே. குப்தா தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் சாதனா கவுசிக் கூறுகையில், ‘விபத்தில் படுகாயமடைந்து வந்த ஞான்ஷியாமின் இடதுகால் முழுமையாக சேதமடைந்துவிட்டது. அந்த காலின் ஜவ்வு,நரம்புகள் முழுமையாக நசுங்கிவிட்டதால், அவரின் கால் மீண்டும் பொருத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஞான்ஷியாம் கால் எடுக்கப்பட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக செவிலியர்கள் சிலர் அந்த காலை அவரின் தலைக்கு கீழ்தலையணையாக வைத்துவிட்டனர் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது’ எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே ஆத்திரமடைந்த ஞான்ஷியாமின் உறவினர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து அவரை டிஸ்சார்ஜ் செய்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ஞான்ஷியாமின் மைத்துனர் கூறுகையில், ‘என் மைத்துனர் ஞான்ஷியாமை கவனிக்க மருத்துவமனையில் யாரும் இல்லை. சிகிக்சையும் முறையாக அளிக்கப்படவில்லை. ஆதலால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க இருக்கிறோம்’எனத் தெரிவித்தார்.
விபத்தில் கால் இழந்து சிகிச்சைக்காக வந்த நோயாளியின் கால் அவருக்கே தலையணையாக்கிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago