ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆந்திராவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் நேற்று 2 மணி நேரம் சாலை மறியல், தர்ணா போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, ‘சிறப்பு அந்தஸ்து போராட்டக் குழு’ சார்பில் மாநிலம் முழுவதும் 2 மணி நேரம் நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டம் நடத்த அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு ஆளும் கட்சியான தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஜனசேனா, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதன்பேரில், நேற்று காலை 10 மணி முதல் 12 மணி வரை ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் அனைத்து கட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். சாலைகளில் டயர்களை கொளுத்தியும், சமையல் செய்தும், கபடி, கோக்கோ போன்ற விளையாட்டுகளை விளையாடியும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
சென்னை-திருப்பதி, சென்னை- விஜய வாடா, விஜயவாடா-விசாகப்பட்டினம், விஜயவாடா-ஹைதராபாத், விசாகப்பட்டினம்-ஸ்ரீகாகுளம் உட்பட பல நெடுஞ்சாலைகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல கிலோமீட்டர் தூரத்துக்கு லாரி, பஸ், கார் போன்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இத னால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாயினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
16 mins ago
இந்தியா
33 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago