மேற்கு ஆப்ரிக்க நாடுகளை அச்சுறுத்தி வரும் எபோலா நோய் நிவாரணத்திற்கு உதவி வரும் ஐ.நா. சபைக்கு, 12 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கும் முடிவுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
மேற்கு ஆப்ரிக்க நாடுகள் எபோலா நோயால் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்த நோயால் குறைந்தபட்சம் 2,200 பேர் பலியாகி உள்ளனர். பிற நாடுகளுக்கும் இந்த நோய் அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், எபோலா தொற்று ஏற்படாமல் இருக்க பல உதவிகளை ஐ.நா. செய்து வருகிறது.
இதில், இந்தியாவின் பங்களிப்பாக 12 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்க, பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்த அறிவிப்பை 69-ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் பொது கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பார் என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா. தலைமைச் செயலர் நிதியத்திற்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்களும், எபோலாவிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் கருவிகளுக்காக 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் தொகையையும் இந்தியா அளிக்க உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago