வாக்காளர் தேர்வு ஜெய் பீம் முழக்கமாகவே இருக்கும்: மாயாவதி நம்பிக்கை

By ஏஎன்ஐ

மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் நமோ-நமோ என்ற கோஷத்தைப் புறக்கணித்து ஜெய் பீம் என்ற முழக்கத்தையே தேர்வு செய்வார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி.

தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மாயாவதி, "மக்கள் நிச்சயமாக நமோ கோஷத்தை புறக்கணித்து ஜெய் பீம் முழக்கத்தை ஆதரிப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.

காங்கிரஸ் கட்சியின் நியாய் திட்டம், வறுமையை ஒழிப்பதற்கான தீர்வு அல்ல. எங்களுக்கு வாய்ப்பளியுங்கள் நாங்கள் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். அரசு சாரா அமைப்புகளிலும் ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம்.

காங்கிரஸ், பாஜக கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் எல்லாம் வெறும் கண் துடைப்பு. காங்கிரஸ் கட்சி மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் வெகு காலமாக ஆட்சியில் இருந்துள்ளது.

ஆனால், வறுமை ஒழிப்புக்கு என்ன செய்தது? அவர்களின் தவறான கொள்கையாலேயே ஆட்சி அதிகாரத்தை இழந்தனர். இப்போது பாஜகவும் தவறான கொள்கையால் அதிகாரத்தை இழக்கப்போகிறது.

இதற்காகத் தான் நாங்கள் போலி வாக்குறுதிகளை வழங்கும் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கவே இல்லை" இவ்வாறு மாயாவதி பேசினார்.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி, பாஜக கூட்டணி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது.

மிக அதிகமான மக்களவைத் தொகுதிகள் கொண்ட உ.பி.யில் 7 கட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்டமாக மே 19-ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் 13 மக்களவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்