மே 23 வரைதான் சந்திரபாபுவின் மகிழ்ச்சி நீடிக்கும் என சிவசேனா கிண்டல் செய்துள்ளது.
சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் இக்கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் (எக்ஸிட் போல்ஸ்) தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சிவசேனாவின் பத்திரிகையில், "எதிர்க்கட்சியில் ஐந்து பேர் பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் உள்ளனர். அவர்களுக்குள்ளேயே யாருடைய ஆட்சி அமையும் என்ற தெளிவும் இல்லை.
ஆனால், பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று வெற்றி பெறும் என அமித்ஷா என ஏற்கெனவே கூறிவிட்டார்.
ஆனாலும் சந்திரபாபு நாயுடு காரணமே இல்லாமல் ஒருவித பதற்றத்துடன் இருக்கிறார். மே 23 வரைதான் அவரது பிரதமர் கனவு ஆராவாரம் எல்லாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கருத்து கணிப்பு முடிவுகள் எல்லாம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருக்க, மாயாவதி - சோனியா சந்திப்பு ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago