உத்தரபிரதேசத்தில் மீதமுள்ள மூன்று கட்ட தேர்தலில் 41 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இங்கு பெறும் வெற்றிகளில், அதன் சமூக வாக்குகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.
உ.பி.யில் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த 41-ல் அதன் மத்திய மற்றும் கிழக்குப்பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு மே 6, 12 மற்றும் 19 தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு 2014 தேர்தலில் பாஜகவும் அதன் கூட்டணியான அப்னா தளமும் 38 தொகுதிகள் பெற்றிருந்தன.
இதன் பின்னணியில் கடந்த முறை வீசிய ‘மோடி அலை’ காரணமானது. மீதமுள்ள மூன்றில், ரேபரேலியில் சோனியா காந்தியும், அமேதியில் ராகுல் மற்றும் ஆசம்கரில் முலாயம் சிங்கும் வெற்றி பெற்றனர். இங்கு தொகுதிகள் குறைந்தாலும், எதிர்கட்சிகளுக்கு கிடைத்த வாக்கு சதவீதம் அதிகம்.
இரண்டு பகுதிகளிலும் சராசரியாக, பாஜக கூட்டணிக்கு 40.8, எதிர்க்கட்சிகளுக்கு 52.9 மற்றும் இதர கட்சிகளுக்கு 6.3 சதவீதம் கிடைத்திருந்தன. இதற்கு அப்பகுதியில் உள்ளவர்கள் தம் சமூகத்தின் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளுக்கு என வாக்களித்தது காரணமாக இருந்தது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உ.பி.யின் வளர்ச்சிமீதான ஆய்வுக்கல்வி நிறுவனத்தின் இயக்குனர் முனைவர். நோமிதா குமார் கூறும்போது, ‘‘இவ்விரு பகுதிகளில் ஜாதி, மதஈடுபாடுகள் கொண்டவர்கள் அதிகம். இதனால், அவர்கள், தங்கள் சமூகங்களைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்கிறார்கள். சில குறிப்பிட்ட பாரம்பரியமாக ஒரே கட்சிக்கு வாக்களிக்கும் பழக்கமும் அவர்களில் பலருக்கு இருப்பதால் சோனியா, ராகுல் போன்ற முக்கியத் தலைவர்களுக்கும் வெற்றி கிடைத்து விடுகிறது. தங்கள் தொகுதி அல்லது மாநிலங்களின் வளர்ச்சி பற்றி கவலைப்படுபவர்கள் இங்கு மிகவும் குறைவு” எனத் தெரிவித்தார்.
உ.பி.யில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் நடத்தும் பிரச்சாரங்கள், இந்த இரண்டு பகுதிகளிலும் அதிகம். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் அதன் தொகுதிகளில் போட்டியிடுவது காரணம்.
இவர்களின் தாக்கம் அதைச் சுற்றியுள்ள தொகுதிகளிலும் ஏற்படும் என எதிர்பார்த்து பிரச்சாரம் அதிகரிக்கப்படுகிறது. இதில், கடைசிகட்ட தேர்தல் நடைபெறும் 13 தொகுதிகளில் பாஜக அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஏனெனில், அக்கட்சிக்கு இதுவரை கிடைத்த வெற்றிகளில் இந்தப் பகுதியில் உள்ள தொகுதிகளே அதிகம். கடந்த தேர்தலிலும் பாஜகவுக்கு இங்கு எதிர்க்கட்சிகளை விட அதிகமான தொகுதிகளுடன், வாக்கு சதவீதமும் கிடைத்திருந்தன. பாஜக கூட்டணி 44.1 சதவீதமும், எதிர்கட்சிகள் 43.9 சதவீதமும் பெற்றன.
உ.பி.யின் மத்திய, கிழக்கு பகுதிகளில் காங்கிரஸ் 18 தொகுதிகள் பெற்றிருந்தது. இதற்கு முந்தைய தேர்தல்களிலும் காங்கிரஸ் பெற்ற தொகுதிகள் இப்பகுதிகளில் அதிகம். இதனால், காங்கிரஸும் கடைசி 3 கட்ட வாக்குப்பதிவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago