மோடிக்கு வாக்களிக்க வாரணாசி வாக்காளர்கள் மிரட்டப்படுகிறார்கள்: மாயாவதி பரபரப்பு குற்றச்சாட்டு

By ஏஎன்ஐ

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி வாக்காளர்கள், அவருக்கே வாக்களிக்க மிரட்டப்படுவதாக, காசு கொடுத்து விலைக்கு வாங்கப்படுவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டில், "வாரணாசியில் தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடக்க வாய்ப்பிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

அத்தொகுதியில் மீண்டும் மோடியே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வெளியாட்களை வைத்து மக்கள் மனங்களை மாற்றும் முயற்சி நடைபெறுகிறது. சில வேளைகளில் பணம் கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்குகிறார்கள். சில வேளைகளில் பணத்துக்கு மசியாதவர்களை அச்சுறுத்துகிறார்கள்.

மேற்குவங்கத்தில் தேர்தலை கூர்ந்து கவனிக்கிறோம் எனக் கூறும் தேர்தல் ஆணையம், வாரணாசியையும் கொஞ்சம் கூர்ந்து கவனிக்கலாமே?" எனப் பதிவிட்டுள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் உத்தரப் பிரதேசத்தில் வாரணாசி தொகுதி உட்பட 7 தொகுதிகள் தேர்தலை சந்திக்கின்றன. மே 23-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் மோடி 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் கேஜ்ரிவாலை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

52 mins ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்