மோடியே மீண்டும் இந்தியப் பிரதமராவார் என்பதைக் கணித்து கடந்த பிப்ரவரி மாதமே நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டேன் எனக் கூறியிருக்கிறார் இந்தியாவுக்கான கஜகஸ்தான் நாட்டு தூதர் புலத் சர்சேன்பயேவ்.
நாட்டின் 17-வது மக்களவை பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை நடந்தது. மே 23-ம் தேதி முடிவுகள் வெளியாகின. இதில் பாஜக 303 இடங்களைப் பிடித்து, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட 58 பேர் நேற்று பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து கொண்டனர்.
நாட்டின் 17-வது மக்களவை பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை நடந்தது. மே 23-ம் தேதி முடிவுகள் வெளியாகின. இதில் பாஜக 303 இடங்களைப் பிடித்து, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட 58 பேர் நேற்று பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து கொண்டனர்.
இந்நிலையில் இந்தியாவுக்கான கஜகஸ்தான் நாட்டு தூதர், "நான் கடந்த பிப்ரவரி மாதமே மோடிக்கு வாழ்த்து சொல்லிவிட்டேன். எங்கள் நாட்டின் அதிபர் சார்ப்ல் அவருக்கு வாழ்த்து சொன்னேன். நீங்கள் மீண்டும் பிரதமரானதும் உங்களை சந்திப்பேன் என்றேன். அது நடந்துள்ளது. மோடி மீண்டும் பிரதமராகியுள்ளது இந்தியாவுக்கு ஒரு நல்ல அறிகுறி. பிரதமர் மோடி நிறைய சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
சில சூழ்நிலைகளை மாற்றவும் சில திட்டங்களை செயல்படுத்தவும் கால அவகாசம் அவசியம். மோடிக்கு கிடைத்துள்ள இந்த இரண்டாவது காலகட்டம் அதை அவருக்கு வழங்கும். முதல் பருவத்தில் அவர் முன்மொழிந்த சீர்திருத்தங்களை இரண்டாம் பருவத்தில் நிறைவேற்றுவார் என நான் நம்புகிறேன்" என்றார்.
இருநாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு குறித்து பேசும்போது, இந்தியா - கஜகஸ்தான் இடையே பொருளாதார நல்லிணக்கம் வளர்ந்து கொண்டிருக்கிறது. 2015-ல் வர்த்தகம் 460 மில்லியன் டாலர் அளவில் இருந்தது. இது இனி வருங்காலங்களில் இன்னும் அதிகரிக்கும் என நம்புகிறேன் எனக் கூறினார்.
ரைஸிங் இந்தியா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது இந்தியாவுக்கான கஜகஸ்தான் தூதர் இதனைத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago