2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்வது தொடர்பாக வரும் அக்டோபர் 20-ம் தேதி உத்தரவிடப்படும் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
2ஜி வழக்கில் தொலைத் தொடர்புத் துறை நிறுவனமான ஸ்வான் டெலிகாமிடமிருந்து ரூ. 200 கோடி, கலைஞர் டி.வி.க்கு கைமாறியது குறித்து அமலாக் கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவன மேம்பாட்டாளர்கள் ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, பாலிவுட் திரைப்பட இயக்குநர் கரீம் மொரானி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கலைஞர் டிவி முன்னாள் இயக்குநர் சரத் குமார் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பின் வாதங்கள் முடிவடைந்த பிறகு, வரும் அக்டோபர் 20-ம் தேதி குற்றச்சாட்டுப் பதிவு செய்வது தொடர்பான உத்தரவு வெளியிடப்படும் என்று நீதிபதி ஓ.பி. சைனி நேற்று தெரி வித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago