நிதிஷ்குமாரின் முதல்வர் பதவிக்கு நெருக்கடி: பிஹாரில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு எதிரொலி

By ஆர்.ஷபிமுன்னா

மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு பல்வேறு மாநில ஆட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பட்டியலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி(என்டிஏ) உறுப்பினரான நிதிஷ் அரசும் இடம் பெற்று விட்டது. இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் சராசரியாக 30 தொகுதிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கிடைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதனால், பாஜக நிர்வாகிகள் முதல்வர் பதவி தங்களுக்கு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தத் துவங்கி உள்ளனர்.

இதுகுறித்து பிஹார் பாஜக சார்பில் அதன் தலைவர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. பிஹாரில் ஜேடியூவுடன் நிலவும் கூட்டணி ஆட்சியில் பாஜகவுக்கு வெறும் நான்கு மாநில அமைச்சர்கள் பதவி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளனது.

அங்குள்ள இவ்விரு கட்சிகளுக்கு உள்ள எம்எல்ஏக்கள் அடிப்படையில் அவ்வாறு செய்திருந்தார் நிதிஷ். இங்கு மக்களவை எம்பிக்களில் 22 பாஜகவிடமும், 2 ஜேடியூவிடம் உள்ளனர். எனினும், இந்தமுறை தேர்தலில் பாஜக மற்றும் ஜேடியூவிற்கு சரிநிகராக 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனால், பிஹார் பாஜகவினர் இடையே தேர்தலின் முடிவுகள் வெளியாகும் முன்பாகவே அதிருப்தி கிளம்பியுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பிஹார் பாஜக நிர்வாகிகள் கூறும்போது, ’கட்சிகளுக்கு உள்ள எம்எல்ஏக்கள் அடிப்படையில் நிதிஷுக்கு முதல்வர் பதவி கிடைத்தபடி மக்களவை தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்படவில்லை. இந்தமுறையும், பிரதமர் நரேந்திர மோடி பெயரில்தான் வாக்குகள் பதிவாகி உள்ளன. நிதிஷால்தான் எங்கள் பழைய உறுப்பினர்களான ஜிதன்ராம் மாஞ்சியும், உபேந்திரா குஷ்வாஹாவும் என்டிஏவை விட்டு வெளியேறி இருந்தனர். இதனால், கருத்து கணிப்புகளின்படி முடிவுகள் வெளியானால் பாஜகவுக்கு முதல்வர் பதவி விட்டுத்தரப்பட வேண்டும் என வலியுறுத்திக் கடிதம் எழுதியுள்ளோம்’ எனத் தெரிவித்தனர்.

இதனிடையே, பாஜகவின் கொள்கைகளான ராமர் கோயில், இந்துத்துவா, பொது சிவில் சட்டம் மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் நீக்குதல் ஆகியவற்றுக்கு நிதிஷ்குமார் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். எனவே, கணிப்புகளின்படி வெளியாகும் முடிவுகளில் பாஜகவின் ஆட்சி மத்தியில் அமைந்தால் அது, அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தலிலும் பிஹாரில் பாஜுக ஆட்சி அமையும் என அக்கட்சியின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பாஜகவின் மனநிலையை ஓரளவிற்கு உணர்ந்த நிதிஷும் அதற்கு தயாராகி வருகிறார். இதனால், பாஜகவுடன் கூட்டணியாக இருந்தபோதெல்லாம் அமைதி காத்த அவர் பிஹாருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் பிரச்சினையை மீண்டும் கையில் எடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்