ஆந்திராவில் நடந்து முடிந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கூறினார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுடன் டெலிகான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
எனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பல தேர்தல்களை சந்தித்து விட்டேன். அந்த அனுபவத்திலும், எனக்கு வந்த தகவல்களின்படியும் கூறுகிறேன், இம்முறை நாம் அமோக வெற்றி பெறுவது உறுதி. இதில் வாக்கு வித்தியாசம் என்ன என்பது மட்டுமே நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.
வாக்கு எண்ணிக்கை எனும் முக்கிய கட்டத்திற்கு நாம் வந்துள்ளோம். இதில் நமது கட்சியின் முகவர்களாக அனுபவம் மிக்கவர்களை நாம் தேர்வு செய்ய வேண்டும். கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கை வரை நாம் அங்கிருப்பது அவசியமாகும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago