மும்பையில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய வனவிலங்கு பூங்காவில் வசித்த 11 வயதான ராயல் பெங்கால் வகையைச் சேர்ந்த புலி ஒன்று புற்றுநோய் காரணமாக இன்று (வியாழக்கிழமை) பலியானது.
இறந்து போன புலியின் பெயர் யாஷ். இந்தப் பூங்காவில், மூடிய வாகனத்தில் சென்று புலிகலை அருகில் பார்க்கும் புலிகள் சவாரி மிகவும் பிரபலமானது. அங்கிருந்த புலிகளிலேயே யாஷ்தான் பார்வையாளர்களை அதிகமாகக் கவர்ந்த புலியாக இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நோய் வாய்ப்பட்டிருந்த புலி இன்று இறந்துபோனது.
இது குறித்து துணை வணக் காவலர் கிரண் தபோல்கர் கூறும்போது, "யாஷ் கடந்த 2008-ம் ஆண்டு பிறந்தது. சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் வாடி வந்தது. அதற்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
ஆனாலும் தொடர்ந்து எடை குறைந்து நலிவடைந்தது. பின்னர் பல்வேறு உள் உறுப்புகளும் செயலிழக்கத் தொடங்கின. இன்று யாஷ் இறந்துபோனது" என்றார்.
கடந்த மே மாதம் இதே பூங்காவில் பாஜிராவ் என்ற வெள்ளைப் புலி இறந்தது. இப்போது இந்தப் பூங்காவில் வெறும் 6 புலிகள் மட்டுமே இருக்கின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago