வேறு வேறு கட்சி சார்பில் போட்டியிட்டாலும் தேர்தலில் ஒருவரையொருவர் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பிரபல தம்பதிகள்

By ஆர்.ஷபிமுன்னா

மக்களவைக்கு கடைசி கட்ட தேர்தல் மே 19-ல் நடைபெற உள்ளது. கடைசி கட்ட வாக்குப்பதிவில் பிஹாரின் இரண்டு தொகுதிகள் அதிக கவனம் பெற்றுள்ளன. இவை,பாலிவுட் நடிகரான சத்ருகன் சின்ஹாவின் பாட்னா சாஹேபும், கிரிமினல் அரசியல்வாதியான பப்பு யாதவ் எனும் ராஜேஷ் ரஞ்சன் யாதவின் மதேபுரா ஆகியன ஆகும்.

பாஜகவின் எம்பியான சத்ருகன் இந்தமுறை காங்கிரஸில் இணைந்துள்ளார். இவரது மனைவியான பூனம் சின்ஹா, சமாஜ்வாதியில் இணைந்து முதன்முறையாகப் உ.பி.யின் லக்னோவில் போட்டியிடுகிறார். உ.பி.யில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் இணைந்துள்ள மெகா கூட்டணியில் காங்கிரஸ் சேர்க்கப்படவில்லை. எனினும், தனது மனைவி என்பதால் சமாஜ்வாதியின் பூனமிற்காக காங்கிரஸின் சத்ருகன் பிரச்சாரம் செய்திருந்தார். பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் போட்டியிடும் லக்னோவில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் பூனம், தனது கணவருக்காக பாட்னா சாஹேபில் பிரச்சாரம் செய்கிறார். இங்கு, சத்ருகனுக்கும் பாஜகவின் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கும் நேரடிப் போட்டி நிகழ்கிறது.

மற்றொரு தம்பதியான ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) எம்பி.யான பப்பு யாதவும், காங்கிரஸின் எம்பி.யான அவரது மனைவி ரஞ்ஜிதா ரஞ்சனும் களத்தில் உள்ளனர். ஆர்ஜேடியில் இருந்து அதன் தலைவர் லாலு பிரசாத் யாதவால் வெளியேற்றப்பட்ட பப்பு, இந்த தேர்தலில் ஜன் அதிகார் எனும் பெயரில் புதிய கட்சி துவக்கி உள்ளார். இதன் சார்பில் மதேபுராவில் பப்பு போட்டியிடுகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட ஆறு கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ள ஆர்ஜேடி சார்பில் இங்கு சரத்யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார். இவரை ஒருபுறம் பப்பு கடுமையாக எதிர்க்க மறுபுறம், காங்கிரஸில் இருக்கும் அவரது மனைவி மதேபுராவில் பிரச்சாரம் செய்கிறார். காங்கிரஸின் எம்பியான ரஞ்சீதா, மீண்டும் போட்டியிடும் பிஹாரின் சுபோல் தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. அங்கு மனைவி ரஞ்சீதாவிற்காக பப்பு பிரச்சாரம் செய்திருந்தார்.

இவ்விரு தம்பதிகளின் நடவடிக்கைகளால், பாட்னா சாஹேப் மற்றும் மதேபுராவில் பிரச்சாரம்செய்யும் அவர்களது கட்சிகளின்தொண்டர்கள் கோபம் அடைந்துள்ளனர். எனினும், இது முழுக்க, முழுக்க அவர்கள் குடும்ப விவகாரம் எனக் கூறி, இந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்டக் கட்சிகள் தலையிடாமல் மவுனம் காக்கிறது. இதன் விளவு என்ன என்பது மே 23-ல் வெளியாகும் தேர்தல் முடிவில் தெரிந்துவிடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்