தன்னை சுயநலவாதி என விமர்சித்த பாஜக பிரமுகர் கோபால் நாராயண் சிங்குக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் நிதிஷ் குமார்.
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஐஜத-வுக்கு மத்திய அமைச்சரவையில் ஒரே ஒரு சீட் கொடுக்க முன்வரப்பட்டது. ஆனால், மூன்று அமைச்சர்கள் வேண்டும் எனக் கோரி நிதிஷ் பிரச்சினை செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. பதவியேற்பு விழாவுக்கு சற்று நேரத்துக்கு முன்னதாக நிதிஷ் மத்திய அரசின் அறிவிப்பை நிராகரித்து பிரச்சினை செய்ததாகக் கூறப்பட்டது.
இது குறித்து பாஜகவின் கோபால் நாராயாண் சிங் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, "நிதிஷ் குமார் ஒரு சுயநலவாதி. அவர் எப்போதுமே அவருக்கான ஆதாயத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பார். அதற்கேற்ற மாதிரிதான் கட்சி சார்ந்த முடிவுகளைக் கூட எடுப்பார்.
பிஹாரில் பாஜக உதவியுடன் 7 ஆண்டுகள் ஆட்சி நடத்திவிட்டு எங்கள் ஆதரவு தேவையில்லை என்ற நிலைவந்தவுடன் தனியாக ஆட்சி செலுத்த ஆரம்பித்துவிட்டார். எங்களை தூக்கி எறிந்தார். எந்த ஒரு கூட்டணி கட்சியும் கேபினட் அமைச்சர் பதவி கேட்டு நச்சரிக்கவில்லை. ஆனால் நிதிஷ் மட்டுமே அப்படி செய்கிறார். அவருடைய நடவடிக்கைகளுக்கு அவர் மாநில மக்களே அவர் மீது கைகாட்டுவார்கள்" என்றார்.
நிதிஷ் விளக்கம்:
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், நாங்கள் மூன்று அமைச்சர்கள் கேட்டு தகராறு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது உண்மையல்ல. ஒரே ஒரு அமைச்சர் பதவி தருவதாகச் சொன்னார்கள். இது குறித்து எனது கட்சியினருடன் ஆலோசித்து சொல்கிறேன் என்றேன். அவர்களுடன் ஆலோசித்தேன். அவர்களும் ஒரே ஒரு அமைச்சர் என்பது வெறும் அடையாள அரசியல் பிரதிநிதித்துவமாக இருக்கும் என்றனர். அதனால், அந்த சலுகையை நிராகரித்தோம். அதற்காக எங்களுக்குள் ஏதும் பிணக்கு ஏற்பட்டதாக அர்த்தமில்லை. இது பெரிய விஷயமே இல்லை. நாங்கள் முழுமனதோடு தேஜ கூட்டணியில் இருக்கிறோம். எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை" என்றார்.
அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களிலும் பாஜக 17 இடங்களிலும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago