இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி

By ஏஎன்ஐ

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வயநாடு செல்கிறார். கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார்.

அமேதியில் ஸ்மிருதி இரானியிடம் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார். ஆனால், வயநாட்டில் அவர் 7,05,304 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளர் பி.பி.சுனீரைவிட 4,31,063 வாக்குகள் அதிகமாக ராகுல் பெற்றிருந்தார்.

கடந்த 24-ம் தேதி, ராகுல்காந்தி வயநாடு மக்கள் தன்னை தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்ததற்காக நன்றி கூறியிருந்தார்.

இந்நிலையி, ஜூன் 7 தொடங்கி அவர் இரண்டு நாட்கள் வயநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் மலையாளத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், இத்தேச மக்களின் முடிவை நான் மதிக்கிறேன். வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள். வயநாடு மக்கள் என்னை தேர்வு செய்தமைக்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். என் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்த காங்கிரஸ் தொண்டர் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களைப் பிடித்து, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பு ஏற்று ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதனை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்கவில்லை. மூத்த தலைவர்கள் தொடர்ந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் ஜூன் 7 தொடங்கி ராகுல் 2 நாள் வயநாடு சுற்றுப்பயணத்தைத் திட்டமிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்