டெல்லியின் சத்ரா மார்கிலுள்ள மிராண்டா கல்லூரிக்கு அருகில் மத்திய அரசின் ஆசிரியர் கல்வியல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 1947-ல் டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் அமைக்கப்பட்ட இந்தக் கல்வி நிறுவனத்தில் ஆங்கிலம், உருது, இந்தி, சமஸ்கிருதம் போன்றபாடப்பிரிவுகள் துவக்கப்பட்டன. பிறகு, தமிழ், பஞ்சாபி, பெங்காலியும் சேர்க்கப்பட்டன.
தமிழுக்காக ஒவ்வொரு வருடமும் பொது நுழைவுத்தேர்வின்அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இதற்கான நுழைவுத்தேர்வில் மாணவர்கள் தகுதி பெறுவதில்லை எனதமிழ் மொழிக்கான கல்வியியல்பிரிவு கடந்த 2016 ஆம் ஆண்டு மூடப்பட்டது. தமிழுக்கான ஒதுக்கீடு, வேறு பாடப்பிரிவுகளுக்கும் மாற்றப்பட்டிருந்தது.
இதுதொடர்பான செய்தி ‘இந்து தமிழ்’ நாளேட்டில் பிப்ரவரி 19-ல்வெளியிடப்பட்டது. இதன் தாக்க மாக தமிழுக்கானப் பாடப்பிரிவைதுவக்க டெல்லியின் பல்வேறு தமிழ் அமைப்புகள் அக்கல்வி நிறுவனத்திடம் வலியுறுத்தின. இதை ஏற்று மீண்டும் துவக்குவதாக இருந்த தமிழ் பாடப்பிரிவுக்கு இந்த வருடமும் மூடுநிலை தொடர்கிறது.
இது குறித்து ’இந்து தமிழ்’ நாளேட்டிடம் அக்கல்வியியல் நிறுவன வட்டாரம் கூறும்போது, ‘‘இதுபோல், தமிழுடன் பெங்காலி மொழி பாடப்பிரிவுகள் இரண்டாம் முறையாக மூடப்பட்டுள்ளன ஆனால், இது அங்கு பணியாற்றும் சில பேராசிரியர்களின் உள்நோக் கத்துடனான முடிவே தவிர, மத்திய அரசின் முடிவல்ல. இதனால், டெல்லியில் வருடந்தோறும் தமிழில் பட்டம் பெறும் நூற்றுக் கணக்கான மாணவர்கள் பாதிக்கப் படுவார்கள்’’ எனத் தெரிவித்தன.
புதிய கல்வியாண்டுக்கு விளம்பரம் வெளியிடுவது வழக்கம். அதற்கு முன்பாக அக்கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்களுக்காக ஒரு சுற்றறிக்கை அளிக்கப்படும். இதில் ஆசிரியர்கள் திருத்தம் தெரிவித்தால் அதை சரிசெய்து விளம்பரமாக அளிப்பார்கள். ஆனால், சில நாட்களுக்கு முன் அளிக்கப்பட்ட அந்த சுற்றறிக்கையில் பெரிதும் எதிர்பார்த்ததமிழ்பாடப்பிரிவு இடம்பெற வில்லை. இதை அங்கு வேறுபலதுறைகளில் பணியாற்றும் தமிழர்களான பேராசிரியர்கள் எடுத்துக்கூறியும் அதில் மாற்றத்தை செய்ய அதன் நிர்வாகம் முன்வரவில்லை.
தமிழ்பாடத்திற்கான முதுநிலை கல்வியியலும் (எம்எட்) துவக்கப்படவில்லை என இங்கு புகார்உள்ளது. இதனால் டெல்லியில்வாழும் தமிழர்கள் பிஎட் கல்விக்காகப் பல லட்சங்கள் செலவு செய்துதமிழகத்துக்கு செல்கின்றனர். இதுமட்டுமல்லாமல், டெல்லி பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் மூன்று கல்லூரிகளில் இருந்த தமிழ் பாடப்பிரிவுகளுக்கான ஆசிரியர்களும் அமர்த்தப்படாமல் உள்ளனர். 15 வருடங்களாக நீடிக்கும் இந்த நிலையால் தமிழ் துறைகள்மூடும் நிலையை எட்டியுள்ளன. எனவே, இந்த பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago