மகாராஷ்டிரத்தில் பாஜக, சிவ சேனா கூட்டணியில் விரிசல் அதி கரித்து வருகிறது. இதேபோல் காங் கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிலும் சிக்கல் ஏற்பட் டுள்ளது.
இதே நிலை நீடித்தால் மகா ராஷ்டிர சட்டசபை தேர்தலில் 4 பிரதான கட்சிகளும் தனித்துப் போட்டியிடக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். பாஜக, சிவசேனா கட்சிகளிடையே கடந்த சில நாட்களாக தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மொத்தமுள்ள 288 தொகுதி களில் இரு கட்சிகளும் தலா 135 தொகுதிகளில் போட்டியிடலாம், எஞ்சிய 18 தொகுதிகளை சிறிய கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கலாம் என்று பாஜக கூறி வருகிறது.
இதனை ஏற்க மறுத்துள்ள சிவசேனா, 155 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம், 125 தொகுதிகள் பாஜகவுக்கும் மீதமுள்ள 8 தொகுதிகள் இதர கூட்டணி கட்சிகளுக்கும் ஒதுக்கப் படும் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர பாஜக மூத்த தலைவர் வினோத் தவ்டே கூறியபோது, சிவசேனாவுடனான கூட்டணி தொடரவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அந்தக் கட்சியின் தொகுதிப் பங்கீட்டை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்து வரும் நிலையில் நேற்றுமுன்தினம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே மாநில பாஜக பொறுப்பாளர் ஓ.பி.மாத் தூரை சந்தித்துப் பேசினார். நேற்றும் இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் சந்தித்து ஆலோ சனை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தைகளில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் கூட்டணி தொடர் பாக சிவசேனா இன்று இறுதி முடிவை அறிவிக்கும் என்று அந்தக் கட்சி உறுதிபடத் தெரிவித்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கெடு
மகாராஷ்டிரத்தில் தற்போது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இந்த கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டிலும் குழப்பம் நீடிக்கிறது.
மொத்தமுள்ள 288 தொகுதி களில் தேசியவாத காங்கிரஸுக்கு 124 தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் முன்வந்துள்ளது. இதனை தேசியவாத காங்கிரஸ் ஏற்க மறுத்துவிட்டது. இதுகுறித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் நிருபர்களிடம் கூறியதாவது:
50:50 என்ற அடிப்படையில் தொகுதிப் பங்கீடு அமைய வேண்டும் என்பதை காங்கிரஸிடம் பலமுறை தெரியப்படுத்தி விட்டோம். ஆனால் அந்தக் கட்சி தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்னும் 2 நாள்களில் காங்கிரஸ் முடிவு எடுக்க வேண்டும். இல்லையெனில் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago