பாஜக எதிர்ப்பு கட்சிகளுக்கு சோனியா அழைப்பு: மே 23-ல் முக்கிய ஆலோசனை

By ஏஎன்ஐ

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்ற கணிப்பின் காரணமாக ஐமு கூட்டணி தலைவர் சோனியா காந்தி பாஜக எதிர்ப்பு கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு அழைப்புவிடுத்துள்ளதாகத் தெரிகிறது.

மேலும், இந்தக் கூட்டத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு காங்கிரஸ் மூத்த தலைவர்களான அகமது படேல், ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், அசோக் கெலாட் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒருமித்த எண்ணம் கொண்ட கட்சியினரை தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியாக திரட்ட காங்கிரஸ் வியூகம் வகுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேரள முதல்வர் பினராயி விஜயனையும், திமுக தலைவர் ஸ்டாலினையும் சந்தித்தார். இந்த சந்திப்புகூட மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சியே.

இந்நிலையில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஒய்எஸ்ஆர்சி காங்கிரஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குலாம் நபி ஆசாத் நேற்று (புதன்கிழமை) பேசும்போதுகூட எங்களுக்கு பிரதமர் பதவி மீது கவனமில்லை எங்கள் இலக்கு பாஜகவை அப்புறப்படுத்துவதே எனக் கூறியிருந்தார்.

இத்தகைய அரசியல் சூழலில் சோனியா அழைப்பு விடுத்துள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கான அழைப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்