மத்தியில் எந்த கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் அமைச்சராகி விடும் ராம்விலாஸ் பாஸ்வான்

By ஆர்.ஷபிமுன்னா

மத்தியில் ஆட்சிக்கு வரும் பெரும்பாலான அரசுகளில் அமைச்சர் பதவி பெறுபவராக உள்ளார் ராம்விலாஸ் பாஸ்வான். பிஹாரின் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) கட்சியின் தலைவரான அவர் மீண்டும் அமைச்சராகி உள்ளார்.

பிஹாரின் பிராந்தியக் கட்சியான எல்ஜேபியின் நிறுவனராக இருப்பவர் ராம்விலாஸ் பாஸ்வான். தலித் ஆதரவுக் கட்சியான எல்ஜேபி அம்மாநிலத்தில் போட்டியிட்ட ஆறு தொகுதிகளிலும் வென்றுள்ளது. பிஹார் மாநில மற்றும் தேசிய அரசியலின் சூழலுக்கு ஏற்ப பொருத்தமான கூட்டணியில் இணைவதில் பாஸ்வானுக்கு இணையாக எவருமில்லை. 1989-ல் ஜனதா தளம் கட்சியின் எம்பியான பாஸ்வான், பிரதமர் வி.பி.சிங் அமைச்சரவையில் முதன்முறையாக தொழிலாளர் நலத்துறையின் இணை அமைச்சரானார்.

1996-ல் மாநிலங்களவை உறுப்பினரானவருக்கு ரயில்வே துறையின் இணை அமைச்சர் பதவி கிடைத்தது. ஜனதா தளம் உடைந்ததில் உருவான ஒரு கட்சியான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) சார்பில் 1998-லும் பாஸ்வானுக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறையின் இணை அமைச்சர் பதவி கிடைத்தது. பிறகு ஜேடியூவில் இருந்து தனியாக பிரிந்த பாஸ்வான் எல்ஜேபியை 2000-ம் ஆண்டில் துவக்கினார். அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில்(என்டிஏ) நிலக்கரித்துறை அமைச்சரானார். 2004-ல் காங்கிரஸ் தலைமையில் உருவான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் (யுபிஏ) இணைந்தவருக்கு ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தில் வாய்ப்பளிக்கப்பட்டது.

பிறகு, பிஹாரின் அரசியல் காரணமாக யுபிஏவில் இருந்து வெளியேறியவர் 2009 மக்களவை தேர்தலில் முதன்முறையாக தோல்வியுற்றார். இதனால் அப்போது மட்டும் அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2014-ல் வீசிய நரேந்திர மோடி அலையை முன்கூட்டியே உணர்ந்த பாஸ்வான் அவருடன் சேர மீண்டும் என்டிஏவில் இணைந்தார். பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மத்திய உணவுத்துறை அமைச்சராக இருந்தார் பாஸ்வான். இவருக்கு இந்த முறையும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

எனினும், இந்தமுறை பாஸ்வான் எம்பியான தன் மகன் சிராக் பாஸ்வானை அமைச்சரவையில் அமர வைக்க விரும்பினார். இதன் மீதான செய்திகளும் வெளியாகவே பிரதமர் மோடியிடம் இருந்து அவருக்கு நெருக்கடி கிளம்பியதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், தன் அமைச்சரவை பதவி ஏற்கும் வரை அதன் உறுப்பினர் யார் என்ற ரகசியம் காப்பதில் மோடி வல்லவராக இருப்பது அதன் காரணம். இதனால், அமைச்சரவையில் வாய்ப்பு கிடைத்தால், தானே அதை பெறுவதாகவும், மகனுக்கு என்ற செய்திகள் தவறானது என்றும் பாஸ்வான் மறுப்பு தெரிவிக்க வேண்டியதாயிற்றுஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கும் பாஸ்வான் இந்தமுறை மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால், அசாம் அல்லது பிஹார் சார்பில் மாநிலங்களவைக்கு உறுப்பினர் ஆகும் வாய்ப்புகள் உள்ளன.

ஏனெனில், என்டிஏவுடனான கூட்டணியின்போது பாஸ்வானுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் அளிக்கும் பேச்சு இருந்ததாகக் கூறப்பட்டது. இதுவரை விபி.சிங், தேவகவுடா, அட்டல் பிஹாரி வாஜ்பாய், மன்மோகன் சிங் மற்றும் நரேந்திர மோடி என ஐந்து பிரதமர்களின் கீழ் மத்திய அமைச்சராக பாஸ்வான் இருந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்