எங்கள் இலக்கு 273 பிளஸ்; அது கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சி: குலாம் நபி ஆசாத்

By ஏஎன்ஐ

மக்களவை தேர்தலில் எங்கள் இலக்கு 273 பிளஸ். ஆனால் தனிப்பெரும்பான்மை என்ற அந்த இலக்கை எட்டாவிட்டாலும்கூட கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை அமைப்போம் என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியிருக்கிறார்.

இமாச்சலப் பிரதேசத்தில் ஹரோலி எனுமிடத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் பேசியதாவது:

இன்னும் 100 வருடங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தாலும்கூட பாஜக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்காது. ஏன் வாஜ்பாய் காலத்திலேயேகூட அதை நீக்க பாஜக முற்படவில்லையே.

இன்னமும் முந்தைய பாஜக அரசு தீவிரவாதி மசூத் அசாரை விடுவித்தது குறித்து பிரச்சாரம் செய்வது எல்லாம் தேவையற்றது.

இப்போதைய வாதம் எல்லாம் வறுமை ஒழிப்பையும், வேலைவாய்ப்பை உருவாக்குவதையும் பற்றியே இருக்க வேண்டும்.

இந்தத் தேர்தலில், நாங்கள் தனிப் பெரும்பான்மையையே எதிர்பார்க்கிறோம். 273 பிளஸ் சீட்களை எதிர்பார்க்கிறோம். அப்படி அதை எட்டாவிட்டால் மற்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்போம். நாட்டின் மிகப் பெரிய கட்சியின் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதியானவராக இருப்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

சொல்லிவிட்டு யுடர்ன் அடித்த ஆசாத்:

முன்னதாக சிம்லாவில் பேசிய குலாம் நபி ஆசாத், "தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் கட்சி வந்தால்கூட,  மாநில கட்சிகளில் இருந்து ஒரு தலைவர் பிரதமராக வர விரும்பினால்கூட அதை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும். காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி வழங்கப்படாவிட்டால்கூட அதை ஒரு பிரச்சினையாக மாற்ற மாட்டோம்" எனப் பேசியிருந்தார்.

இது பெரும் பரபரப்பு செய்தியான நிலையில், "காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவியை கோராது என்பதில் உண்மையில்லை. ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்து நாட்டில் 5 ஆண்டுகள் நிலையான ஆட்சி தரும். நாட்டின் பிரதமராக வருவதற்கு ராகுல் காந்திக்கு தகுதிகள் இருக்கின்றன" என யுடர்ன் அடித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்