ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சங்கீதா மெம்மோரியல் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஜோதிடம் பார்த்து நோய் என்னவென்று கண்டறியப்படும் விநோதம் நடக்கிறது.
இதை அங்குள்ள மருத்துவர்களே அங்கீகரிக்கின்றனர் என்பதுதான் இன்னும் ஆச்சிரயமான விஷயம்.
இது தொடர்பாக அங்குள்ள மருத்துவர்கள், மருத்துவ அறிவியலில் ஜோதிடத்தைப் பயன்படுத்துவது நோய்களைக் கண்டறிய உதவுவதோடு நோயாளிகளுக்கு மனநல ஆலோசனை தரவும் உதவியாக இருக்கிறது என்கின்றனர்.
ஜெய்ப்பூரில் விஷாலி நகரில் உள்ளது இந்த விநோத ஜோதிட மருத்துவமனை.
இந்த மருத்துவமனையில் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் மகேஷ் குல்கர்ணி கூறும்போது, "மருத்துவ அறிவியலில் ஜோதிடத்தை இணைக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். இது நிச்சயமாக நோயாளிகளுக்கு என்ன நோய் தாக்கியிருக்கிறது என்பதை அறிய உதவுகிறது. இந்திய கலாச்சாரத்தில், ஜோதிடத்திற்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது.
இங்கு மருத்துவமனையில் ஒரு ஜோதிடர் இருக்கிறார். அவருடைய பெயர் பண்டிட் அகிலேஷ் சர்மா. நோயாளிகள் எங்களிடம் வரும்போது, முதலில் அவர்களது பிறந்த தேதி, நேரம் ஆகியனவற்றைப் பெற்றுக் கொள்கிறோம். பின்னர் ஜோதிடர் அதனைக் கொண்டு கணித்து நோய் தாக்கம் என்னவென்று கூறுகிறார்.
இதுவரை நாங்கள் இப்படியாக ஜோதிடம் பார்த்து 70 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறோம். நோய் கணிப்புக்கு மட்டும்தான் ஜோதிடத்தின்படி நடக்கும் சிகிச்சை மருத்துவ அறிவியல்படிதான் மேற்கொள்ளப்படுகிறது. இதில் நோயாளிகளுக்கும் திருப்திதான்.
நோய் கணிப்பு ஜோதிடர் சொல்வதும் நாங்கள் மருத்துவ ஆய்வுகூடத்தில் சோதிப்பதும் எப்போதுமே ஒரே மாதிரியாகவே இருக்கிறது" என்றார்.
இந்த மருத்துவமனையில் இப்போதைக்கு 22 ஊழியர்கள், 5 மருத்துவர்கள் உள்ளனர். அவர்களுடன் ஜோதிடர் பண்டிதர் அகிலேஷ் சர்மாவும் உள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago