ராகுலே பிரதமர் பதவிக்கு தகுதியானவர்; மோடி ஹிட்லரைப் போல் செயல்படுகிறார்: சாம் பித்ரோடா சாடல்

By ஏஎன்ஐ

ராகுல் காந்தியே பிரதமர் பதவிக்கு தகுதியானவர். பிரதமர் மோடி தேசியவாதத்தை ஹிட்லரைப் போல் அணுகுகிறார் எனக் கூறியிருக்கிறார் சாம் பித்ரோடா. இவர் காங்கிரஸ் கட்சிக்கும் இந்திரா காந்தி குடும்பத்துக்கும் மிகவும் நெருக்கமானவர்.

காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பொறுப்பாளராக இருக்கும் சாம் பித்ரோடா, மக்களவைத் தேர்தல் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேகப் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

இதுவரை 4 கட்டங்கள் மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் அவரது இந்த பேட்டி அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

அவர் பேட்டியிலிருந்து:

நாங்கள் மேற்கொண்ட கள ஆய்வின்படி இந்தத் தேர்தலில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுகிறோம். பாஜகவுக்கு சாதகமாக ஊடக செய்திகள் வெளியாகின்றன. ஆனால், கள நிலவரம் நிச்சயமாக அப்படியில்லை. 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக அரசு அளித்த வாக்குறுதிகள் எதுவுமே வடிவம் பெறவிலை என்பதை மக்களே புரிந்து கொண்டுள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்காக இதைச் செய்தோம் என்று சொல்லிக் கொள்ளும்படி மோடி அரசு எதையுமே செய்யவில்லை. 10 கோடி வேலை வாய்ப்பு என்றனர். ஆனால் அதை நிறைவேற்றினார்களா? மாறாக 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். மோடி அரசு பொய்யான வாக்குறுதிகளையே அளித்தது.

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்றனர். விவசாயிகள் இன்று பெருந்துயரத்தில் உள்ளனர். அடித்தட்டு மக்கள் யாரும் மோடி அரசால் பயன் பெறவில்லை. மக்கள், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனாலேயே சொல்கிறோம் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வேலையை உருவாக்குவதை முன்னிலைப் படுத்தியுள்ளது. விவசாயிகள், ஏழைகள் நலனில் அக்கறை செலுத்தியுள்ளது. மார்ச் 2020-க்கு முன்னதாக காலியாக உள்ள 4 லட்சம் மத்தியரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என காங்கிரஸ் உத்தரவாதம் அளித்துள்ளது.

மே 6.12,19 என இன்னும் மூன்று கட்ட தேர்தல் பாக்கியுள்ள நிலையில் காங்கிரஸ் நிச்சயமாக வெற்றி பெறும் எனக் கூறும் சாம், எத்தனை சீட் வெல்லும் என்பதை மட்டும் இப்போதே கணித்துக் கூற இயலாது என சொல்லிவிட்டார்.

ராகுலே பிரதமர்..

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர். இப்போதைய சூழலில் நாட்டை வழிநடத்திச் செல்வதற்கான சரியான தேர்வும் அவரே.

மெகா கூட்டணி தலைவர்கள் அனைவருமே ராகுல் காந்தியை பிரதமராக ஆதரிப்பார்களா என்ற கேள்விக்கு, "காங்கிரஸ் ஆட்சி அமைக்க நேர்ந்தால் பிரதமர் பதவிக்கானவரை கட்சிகூடி முடிவு செய்யும். ஆனால், நான் தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தியை முன்மொழிகிறேன். காரணம், அவர் ஓர் இளைஞர், திறமையானவர், நன்கு படித்தவர், கடந்த 10 ஆண்டுகளில் அவர் நிறையவே அரசியல் அனுபவம் பெற்றிருக்கிறார்.

அதுவும் கடந்த 3,4 ஆண்டுகளில் அவரிடம் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவர் ஒரு சிறந்த தலைவராக உருவாகியிருக்கிறார்.

இந்தியாவுக்கு இப்போது 40, 50 வயதுகளில் உள்ள இளம் பிரதமரே தேவைப்படுகிறார். 60 வயதைக் கடந்த முதியவர் அல்ல. இந்தியாவில் 65 கோடி மக்கள் 25 வயதுக்கும் குறைவானவர்களாகவே உள்ளனர்.  40 வயது கொண்டவர்கள் நிறையவே அரசியலுக்கு வர வேண்டும்.

ராகுல் காந்தி 15 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். ஆனால், இப்போது அவரின் குடியுரிமை குறித்து சர்ச்சைகளைக் கிளப்புகிறீர்கள். மக்கள் உங்கள் பொய்ப் பிரச்சாரத்தை நம்ப மாட்டார்கள். ராகுல் காந்தி ஒரு பெருமித இந்தியர்" என்றார்.

'ஹிட்லரும் மோடியும் ஒன்று'

தேசியவாதத்தை உணர்வாக இல்லாமல் சர்ச்சையாக்க முடியும். அப்படியொரு சர்ச்சையை உருவாக்கியவர் ஹிட்லர். அந்த ஹிட்லரைப் போன்ற அணுகுமுறை கொண்டவர் மோடி. இதை இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால், ஜனநாயகம் அதன் அர்தத்தை இழந்திருக்கிறது, மக்கள் தாங்கள் நினைப்பதைப் பேசுவதற்கு அஞ்சும் சூழலில் உள்ளனர். மூன்றாவதாக, ஒரு பொய்யை சொல்லிவிட்டு அதை அப்படியே தூக்கிப் பிடிக்க தனிநபர்களைத் தாக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதுதான் ஹிட்லர் ஆட்சிமுறை. இதைத்தான் மோடி செய்கிறார்.

இந்த தேசத்துக்கான பிரதமர் அடுத்தவரின் உணர்வுகளை மதிப்பவராக இருக்க வேண்டுமே தவிர 56 இன்ச் மார்பு கொண்டவராக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

100 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருக்கும் பிரதமர் எப்படி பொய்யை சொல்லிவிட்டு அதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை.

இந்தத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு வேறு ஏதும் இல்லாததால் பாஜக தேசியவாதத்தையும் தேசப் பாதுகாப்பையும் மட்டுமே முன்வைத்து பிரச்சாரம் செய்கிறது.

அவர்கள், உண்மையில் வேலை வாய்ப்பு பற்றியும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் விவசாயிகளின் பிரச்சினை குறித்தும்தானே பேசியிருக்க வேண்டும்.

இவ்வாறு சாம் பித்ரோடா கடுமையாக சாடியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்