2 தொகுதிகளில் போட்டியிடும் மத்திய அமைச்சர் குஷ்வாஹா

By ஆர்.ஷபிமுன்னா

பிஹாரில் மத்திய அமைச்சரும் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி (ஆர்எல்எஸ்பி) தலைவருமான உபேந்திர குஷ்வாஹா 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இருந்து வெளியேறிய குஷ்வாஹா, இந்த முறை லாலு பிரசாத் யாதவின் மெகா கூட்டணியில் இணைந்துள்ளார்.

பிஹாரில் லாலு அமைத்துள்ள மெகா கூட்டணியில் அவரது ராஷ்டிரிய ஜனதாதளம் 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 9, குஷ்வாஹாவின் ஆர்எல்எஸ்பி 5, ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா மற்றும் விஐபி ஆகிய கட்சிகள் தலா மூன்று தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இவர்களில், குஷ்வாஹா தனது கராகட் தொகுதியுடன் சேர்த்து உஜார்பூரிலும் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்புதெரிவித்த அவரது கட்சி எம்.பி.யானராம்குமார் சர்மா ஆர்எல்எஸ்பியில் இருந்து வெளியேறி தனிப்பிரிவை துவக்கி உள்ளார். கராகட்டின் வெற்றி சிக்கலுக்கு உள்ளாகி இருப்பதால் குஷ்வாஹா 2 தொகுதிகளில் போட்டியிடுவதாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஆர்எல்எஸ்பி கட்சியினர் கூறும்போது, “இரண்டில் ஒரு தொகுதியில் வெல்வதன் மூலம், அடுத்து ஆட்சி அமைப்பது யாராக இருப்பினும் அவர்களுடன் இணைந்து அமைச்சராவது குஷ்வாஹாவின் நோக்கம்.

எங்களுக்கு பிஹாரில் உள்ள செல்வாக்கின் காரணமாக சட்டப் பேரவை தேர்தலில் பலன் கிடைக்கும் என்பதால் தன்னுடன் மீண்டும் சேர்க்க பாஜகவும் தயங்காது’ எனத் தெரிவித்தனர்.

கடந்த 2014 தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏவின் கூட்டணியில் ஒதுக்கப்பட்ட4-ல் குஷ்வாஹா கட்சி மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இந்தமுறை அதற்கு குறைந்த தொகுதிகளில் ஒதுக்கப்படுவதை எதிர்த்து அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறியது.

இதனால், தேர்தல் முடிவுகளுக்கு பின் அவர் மீண்டும் பாஜககூட்டணியில் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கருதப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உ.பி.யின் அமேதியுடன் கேரளாவின் வயநாட்டில் போட்டியிடுவதும் சர்ச்சையாகி இருப்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

52 mins ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்