எனக்கு காவலாளி வேண்டுமென்றால் நான் நேபாளத்திலிருந்து கொண்டுவருவேன்; ஆனால் எனக்கு என் நாட்டுக்கு ஒரு பிரதமரே வேண்டும் என மோடியைக் கிண்டல் செய்தார் ஹர்திக் படேல்.
படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீட்டுக்காக கடந்த 2015-ல் குஜராத்தில் பிரம்மாண்ட போராட்டம் நடத்தி அரசியலில் கால் பதித்தவர் ஹர்திக் படேல்.
குஜராத்தில் இன்று தேர்தல் நடைபெறும் நிலையில் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த ஹர்திக் படேல், "எனக்கு காவலாளி வேண்டுமென்றால் நான் நேபாளத்திலிருந்து அழைத்து வருவேன். ஆனால், எனக்குத் தேவை ஒரு பிரதமர். என் நாட்டின் பொருளாதாரத்தை வலுவாக்கும் பிரதமர். என் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் பிரதமர். என் இளைஞர்களுக்கு கல்வி தரும் பிரதமர். என் நாட்டு வீரர்களின் தேவைகளை நிறைவு செய்யும் பிரதமர்" என்று கூறி கிண்டல் செய்தார்.
பிரதமர் மோடி நான் தேசத்தின் காவலாளி என்று கூறி பிரச்சாரம் செய்யும் நிலையில் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் காவலாளி பட்டத்தை வைத்து கிண்டல் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஹர்திக் படேலும் இன்று தனது கிண்டலை பதிவு செய்துள்ளார்.
ஹர்திக் படேல் கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குஜராத் உயர் நீதிமன்றம் ஹர்திக் படேல் மீதான வழக்கில் இடைக்கால தடை வழங்க மறுத்துவிட்டது. மேஷானா கலவர வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கு படேல் இடைக்கால தடை கோரியிருந்தார். தடை கிடைக்காததால் ஹர்திக் படேலால் தேர்தலில் போட்டியிட இயலாமல் போனது. குஜராத்தில் 26 மக்களவை தொகுதிகளில் 371 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago