மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஜய் ராய் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 4-ம் கட்ட தேர்தலில் பிரதமர் போட்டியிடுகிறார்.
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியிலிருந்து போட்டியிட அவர் நாளை (வெள்ளிக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதற்காகப் பிரம்மாண்ட பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி வாரணாசியில் களமிறக்கப்படலாம் என பரவலாகப் பேசப்பட்டது.
இதனை காங்கிரஸும் ஏதோ ரகசியம் போலவே காப்பாற்றி வந்தது. பிரியங்கா போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும் என்ற அலசல் கட்டுரைகள் எல்லாம் ஊடகங்களில் வெளியாகின.
ஏன், ராகுல் காந்திகூட வாரணாசி வேட்பாளர் ஆச்சரியத்தை நான் உடைக்க விரும்பவில்லை என்றே கூறியிருந்தார்.
இந்நிலையில், வாரணாசியில் மோடியை எதிர்த்து அஜய் ராய் என்பவரை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்துள்ளது. கடந்த முறையும் இங்கு அஜய் ராயே போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மூன்றாம் இடமே பிடித்தார்.
அதேபோல் கோரக்பூர் தொகுதியில் மதுசூதன் திவாரி போட்டியிடுவார் எனவும், கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago