கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் இதே வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாகதான் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்றார் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தில் அண்மை யில் நடைபெற்ற தேர்தலில் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு பிரச் சினை, வன்முறை, வாக்கு இயந் திரங்களில் குளறுபடி போன்றவை தொடர்பாக மாநில ஆளுநரை சந்தித்து ஜெகன்மோகன் ரெட்டி நேற்று மனு அளித்தார்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஆந்திராவில் தேர்தல் சமயத்தில்நடந்த சம்பவங்கள் குறித்துதனது கட்சி எம்.பி.க்கள் மூலமாகடெல்லியில் தலைமை தேர்தல்ஆணையத்திடம் புகார் அளித்தோம். மீண்டும் தற்போதுஅதே விவரங்களை ஆளுநரி டம் விவரித்து புகார் அளித்திருக் கிறோம்.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் இதே வாக்கு இயந்திர முறையில்தான் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்றார். மேலும், அன்றைக்கு இப்போது உள்ளது போன்ற ஒப்புகைச் சீ'ட்டு வழங்கும் ‘விவி பாட்' முறையும் கிடையாது.
ஆனால், தற்போது ‘விவிபாட்’ முறை செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக, நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதும் தெரிந்துவிடுகிறது.
அண்மையில் நடந்த நந்தியாலம் இடைத்தேர்தலில் கூட தெலுங்கு தேசம் வெற்றி பெற்றது. சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்றால், அதற்கு அவர்தான் காரணம் எனக் கூறுவார். தோல்வி அடைந்தால், அந்த பழியை வேறு யார் மீதாவது போட்டு விடுவார். இதுதான் அவரது மனப்பான்மை.
இப்போது கூட, தோல்வி பயத்தால்தான் வாக்கு இயந்திரங் கள் மீது சந்திரபாபு நாயுடு பழி போடுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago