2014-ல் இரண்டாம் முறையாக பாஜக எம்பியான சத்ருகன் தன் கட்சியை விமர்சனம் செய்து வந்தார். இதனால், அவரை தன்கட்சியில் இழுத்து லக்னோவில் போட்டியிட வைக்க சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவ் முயன்றார்.
இதற்காக, சத்ருகன் லக்னோ வந்து அகிலேஷை சந்தித்து பேசியிருந்தார். ஆனால், அவர் தனக்கு பதிலாக தனது மனைவியான பூனம் சின்ஹாவை போட்டியிட வைக்கும்படி அகிலேஷிடம் கோரி இருந்தார்.
அதேசமயம், அவரை தனது கட்சியில் இழுத்து பிஹாரில் போட்டியிட வைக்க ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவும் முயன்றார். இதன் மீதான செய்தி கடந்த மார்ச் 30–ல் ‘இந்து தமிழ் திசை’ இணையத்தில் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், சத்ருகன் கோரிக்கையை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவ் ஏற்க, பூனம் சின்ஹா அவரது கட்சியில் இணைந்தார். அகிலேஷின் மனைவியான டிம்பிள் யாதவை அவரது வீட்டில் இன்று பூனம் சந்தித்தார்.
பூனைமை பாஜக வேட்பாளர் ராஜ்நாத்தை எதிர்த்து லக்னோவில் பூனம் சின்ஹா சமாஜ்வாதி சார்பில் போட்டியிடுகிறார். இன்னும் ஓரிரு தினங்களில் பூனம் தன் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
உபியின் 80 தொகுதிகளில் அமைந்த மெகா கூட்டணியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷின் சமாஜ்வாதி
மற்றும் அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளனர்.
சமாஜ்வாதியின் திரை நட்சத்திரங்கள்
உபியில் சமாஜ்வாதி சார்பில் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு பாலிவுட் நட்சத்திரத்தை தேர்தலில் போட்டியிட வைக்கின்றனர். இந்தவகையில், கடந்த மக்களவை தேர்தல்களில் ராஜ்பப்பர், நபீஸா அலி மற்றும் ஜெயப்பிரதா ஆகிய பாலிவுட்டினர் சமாஜ்வாதியில் போட்டியிட்டிருந்தனர்.
இவர்களில் ராஜ்பப்பர் பிறகு காங்கிரஸில் இணைந்து தற்போது உபி மாநில தலைவராக உள்ளார். தனது தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். பாஜகவில் இணைந்த ஜெயப்பிரதா மூன்றாம் முறையாக ராம்பூரில் போட்டியிடுகிறார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago